சென்னை: பெண் உதவியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை செனாய் நகரில் 74 வயதுடைய ஓய்வுபெற்ற மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனியாக வசிக்கிறார்.
முதுமை காரணமாக அவருக்கு தேவையான உதவிகளை உடனிருந்து கவனிக்கும் வகையில் மடிப்பாக்கத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் உதவியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியை அந்தப்பெண் உடனிருந்து கவனித்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி,அந்த பெண்ணை காரில் வெளியே அழைத்துச் சென்றுதேவையான உடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் வீடுதிரும்பினர்.
இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பணிப் பெண்ணை அன்று இரவு தனது வீட்டிலேயே தங்கும்படி ஓய்வு நீதிபதி கேட்டுக்கொண்டார். அந்த பெண்ணும் அங்கேயே தங்கினார். நள்ளிரவில் அந்த பெண்ணிடம் ஓய்வு நீதிபதி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதிர்ச்சி, அடைந்த பெண், அவரது ஆசைக்கு இணைங்க மறுத்ததோடு வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். மறுநாள் இது தொடர்பாக டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி, உதவியாளராக வந்த பெண்ணிடம் எல்லை மீற முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
புகார் அளித்த பெண், ஏற்கெனவே சென்னையில் உள்ளதுணை ஆணையர் ஒருவர் மீதுபுகார் தெரிவித்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.