சென்னை | ​திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த உறவினர் கைது

சென்னை | ​திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த உறவினர் கைது
Updated on
1 min read

சென்னை: திரு​மணத்தை மீறிய உறவில் இருந்த பெண் அடித்து கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் உறவினர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்னை வளசர​வாக்​கம் அடுத்த ராமாபுரம், செந்​தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது தெரு​வில் வசித்து வந்​தவர் புஷ்பா (37). கணவருடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 10 ஆண்​டு​களாக அவரை பிரிந்து தனது மகள் மற்​றும் உறவினர்​களு​டன் வசித்து வந்​தார்.

நேற்று காலை இவரது மகள் வீட்​டின் மொட்டை மாடிக்​குச் சென்று பார்த்​த​போது, தாய் புஷ்பா முகம், கைகளில் காயங்​களு​டன் மயங்​கிக் கிடந்​தார். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடி​யாக இதுகுறித்து குடும்​பத்​தினரிடம் தெரி​வித்​தார்.

108 ஆம்​புலன்ஸ் மருத்​து​வப் பணி​யாளர்​கள் வந்து பார்த்​த​போது புஷ்பா இறந்​திருந்​தது தெரிந்​தது. தகவலறிந்த ராமாபுரம் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து புஷ்பா உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

போலீ​ஸாரின் முதல் கட்ட விசா​ரணை​யில் புஷ்பா அடித்து கொலை செய்​யப்​பட்​டது தெரிந்​தது. இதையடுத்​து, கொலை வழக்​காக பதிவு செய்து உறவின​ரான கார்த்​திக்கை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

கொலை நடந்​தது எப்​படி?

கொலை செய்​யப்​பட்ட புஷ்​பாவுக்​கும், உறவின​ரான மதுர​வாயல் ஸ்ரீதேவி​குப்​பத்​தைச் சேர்ந்த டெய்​ல​ரான கார்த்​திக் (34) என்​பவருக்​கும் திரு​மணத்தை மீறிய உறவு இருந்​துள்​ளது. இதையடுத்து புஷ்பா வீட்​டுக்கு கார்த்​திக் அடிக்​கடி வந்து சென்​றுள்​ளார்.

அதன்​படி சம்​பவத்​தன்று இரவும் கார்த்​திக் வந்​துள்​ளார். இரு​வரும் மொட்டை மாடி​யில் தனிமை​யில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அப்​போது அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்டு தகராறாக மாறி​யுள்​ளது. ஆத்​திரம் அடைந்த கார்த்​திக், புஷ்​பாவை தாக்​கி​விட்டு சென்​றுள்​ளார். இதில் புஷ்பா இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை | ​திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த உறவினர் கைது
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in