சென்னை | பெண்ணிடம் பாலியல் சீண்டல்: தனியார் ஊழியர் கைது

சென்னை | பெண்ணிடம்  பாலியல் சீண்டல்: தனியார் ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை, நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த 38 வயது பெண் ஒரு​வர், நேற்றுமுன்​தினம் தனது தோழி​யுடன் அண்​ணா​சாலை​யில் உள்ள பிரபல​மான வணிக வளாகத்​துக்கு சென்​றிருந்​தார்.

அங்கு அவர்​கள் பொருட்​களை வாங்​கி​விட்டு லிஃப்ட்​டில் கீழே இறங்​கிக் கொண்​டிருந்​தனர். அப்​போது, லிஃப்ட்​டில் நின்​று ​கொண்​டிருந்த 2 பேர் திடீரென அந்த பெண்களில் ஒரு​வரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்​தப் பெண் சத்​தம் போடு​வதற்​குள், லிஃப்ட்தரைத்​தளத்​தில் நின்​றதும், இருவரும் அங்​கிருந்துதப்​பியோடி​விட்​டனர்.

இதுகுறித்து, அண்​ணா​சாலை காவல் நிலை​ய போலீ​ஸார் விசாரணை நடத்தி, பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட வேளச்​சேரியைச் சேர்ந்த லட்​சுமி நாராயணன் (41) என்​பவரை கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள அவரது நண்​பரை தேடி வரு​கின்​றனர்​.

சென்னை | பெண்ணிடம்  பாலியல் சீண்டல்: தனியார் ஊழியர் கைது
சென்னை | போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in