திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட அர்ச்சகர் உள்ளிட்ட இருவர் கைது

திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட அர்ச்சகர் உள்ளிட்ட இருவர் கைது
Updated on: 
1 min read

தூத்துக்குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தான உண்​டியலில் பணம் திருடிய கோயில் அர்ச்​சகர் உள்​ளிட்ட 2 பேரை கோயில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பக்​தர்​கள் தங்​கள் காணிக்​கையை செலுத்​து​வதற்​காக, உள்​பிரகாரம், சண்​முக விலாசம் மண்​டபம் என 43 இடங்​களில் நிரந்​தர உண்​டியல்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. உண்​டியல்​கள் மாதந்​தோறும் திறக்​கப்​பட்டு, காணிக்கை எண்​ணப்​படுவது வழக்​கம்.

இந்​நிலை​யில், கோயில் அர்ச்​சகர் முத்​தன் அய்​யர் (65) என்​பவர் மூலஸ்தானம் முன்​புறமுள்ள உண்​டியலில் கடந்த 2, 5, 8 ஆகிய தேதி​களில், உண்​டியலில் கைவிட்டு திருடிய சம்​பவம் கோயில் சிசி​டிவி கேம​ராவில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதேபோல், புதுச்​சேரி ஆர்​யாகுப்​பத்​தைச் சேர்ந்த ராமகிருஷ்​ணன் (58) என்​பவரும் கடந்த 18-ம் தேதி கொடிமரம் முன்பு உள்ள உண்​டியலுக்​குள் துணி​யைச் சுருட்டி வைத்​துள்​ளார். பக்​தர்​கள் அந்த உண்​டியலில் காணிக்கை செலுத்​திய பின்​னர், அந்​தத் துணியை வெளியே எடுத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்​றுள்​ளார். இது​வும் சிசி​டிவி கேம​ராவில் பதிவாகி​யுள்​ளது.

கோயில் உள்​துறை கண்​காணிப்​பாளர்​கள் கொடுத்த புகாரின் பேரில், திருச்​செந்​தூர் கோயில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து முத்​தன் அய்​யரை​யும், ராமகிருஷ்ணனையும் கைது செய்​தனர். இது​தொடர்​பாக போலீ​ஸார் தொடர்ந்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட அர்ச்சகர் உள்ளிட்ட இருவர் கைது
நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in