சென்னை: ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் - இருவர் கைது

மணி​கண்​டன், ஸ்ரீதர்

மணி​கண்​டன், ஸ்ரீதர்

Updated on
1 min read

சென்னை: பட்​டாக்​கத்​தி​யுடன் காரில் சுற்​றித் திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த விவ​காரத்​தில் இரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கே.கே.நகர் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகுதியில், பல்​வேறு குற்ற வழக்​கு​களில் தொடர்​புடைய ‘பி’ பிரிவு ரவுடி​யான ‘நாய்’ மணி​கண்​டன் (33), தனது நண்​பர்​களு​டன் பட்​டாக்​கத்தி ஏந்​தி​யபடி காரில் சுற்​றித்​திரிவ​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்து இரவு ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த கே.கே.நகர் சிறப்பு உதவி ஆய்​வாளர் பழனி (48), தலை​மைக் காவலர் நித்​தி​யானந்​தம் ஆகியோர் அங்கு விரைந்து சென்​றனர்.

அப்​போது காரில் வந்த மணி​கண்​டன், போலீ​ஸார் மீது காரை மோது​வது​போல் ஓட்டி மிரட்​டிய​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் காரை நிறுத்​திய அவர், வாக​னத்​தில் வைத்​திருந்த பட்​டாக்​கத்​தியை எடுத்து தாக்க முயன்​றார்.

உடனே சிறப்பு உதவி ஆய்​வாளர் பழனி, மணி​கண்​டனை மடக்​கிப் பிடித்து பட்​டாக்​கத்​தியை பறிக்க முயன்​ற​போது இரு​வருக்​கும் இடையே கடும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் ஆத்​திரமடைந்த மணி​கண்​டன், சிறப்பு உதவி ஆய்​வாளர் பழனியை தாக்​கி​னார்.

பின்​னர் மணி​கண்​டன் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர். காயமடைந்த சிறப்பு உதவி ஆய்​வாளர் பழனி, கே.கே.நகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார்.

இது ஒரு​புறம் இருக்க சம்​பவத்​தில் பயன்​படுத்​தப்​பட்ட கார் மற்​றும் பட்​டாக்​கத்​தியை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பின்​னர் போலீ​ஸாரை பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​தது, அரசு ஊழியரை தாக்​கியது, கொலை மிரட்​டல் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து கே.கே.நகர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

தொடர்ந்து தலைமறை​வாக இருந்த மணி​கண்​டன், அவரது நண்​பர் ஸ்ரீதர் (26) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள மேலும் 2 கூட்​டாளி​களை தனிப்​படை அமைத்​து போலீ​ஸார்​ தேடி வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>மணி​கண்​டன், ஸ்ரீதர்</p></div>
ஆர்.கே.நகர், திருவெறும்பூர் உள்ளிட்ட தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in