

கோவை: கோவை மாவட்ட காவல் துறையில் பெண் ஆய்வாளராக பணியாற்றி வருபவருக்கு, மதுக்கரையில் சொந்தமாக வீடு உள்ளது. நேற்று முன்தினம் இவர் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றார்.
தனது வாகன ஓட்டுநராக பணியாற்றிவந்த காவலரான மாதவ கண்ணன்(30) என்பவர் தங்க வீட்டில் உள்ள ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வசித்து வந்த காவல் ஆய்வாளரின் உறவுக்கார பெண் ஒருவரை தனது செல்போனில் தவறாக மாதவ கண்ணன் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்த அப்பெண், காவல் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் மதுக்கரை போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து காவலர் மாதவ கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.