

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாறன்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, வழக்கில் இருந்து விடுவிக்க காவல் துறை அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி வாங்கியதாக டிஜிபியிடம் மருத்துவமனையின் பங்குதாரர் சரவணன் மனு அளித்தார். இதையடுத்து, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில் அக்.9-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி பின்னர் அவரைக் கைது செய்தனர். திருவையாறு நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சுகுமாறனை போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, சுகுமாறனுக்கு 24 மணி நேரம் மட்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.