நெல்லை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர், அவரது சகோதரர் கொலை

கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் விசாரணை மேற்கொண்டார்

கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் விசாரணை மேற்கொண்டார்

Updated on: 
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் மணிப்புரம் பகுதியில் கோயில் நிலப் பிரச்சினை காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளரும் அவரது சகோதரரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (70). இவர் நெல்லை கண்ணன் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக இவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜ ரத்தினம் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள மாடசாமி பேச்சியம்மன் கோயில் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த கோயில் கொடை விழாவின் போதே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை மாடசாமி பேச்சியம்மன் கோயில் பகுதியில் செந்தில்குமார் லாரியில் மண் கொட்டச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜ ரத்தினம் ஆகியோர் செந்தில்குமாரிடம் கோயில் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜ ரத்தினத்தை சரமாரியாகக் குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த டால்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கோலஸ் ராஜ ரத்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த மற்றொரு தரப்பான செந்தில்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நெல்லை சந்திப்பு போலீஸார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டைக் கொலை சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் விசாரணை மேற்கொண்டார்</p></div>
“மேகேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது” - மு.வீரபாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in