நடிகை மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

நடிகை மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: பட்​டியலினத்​தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலை​தளத்​தில் வீடியோ வெளி​யிட்​ட​தாக நடிகை மீரா மிதுனுக்கு எதி​ராக வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்​தனர்.

சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்​நிலை​யில், இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மீரா மிதுன் மனு தாக்​கல் செய்​தார்.

‘ஊட்​டச்​சத்து குறை​பாடு காரண​மாக எனது உடல்​நலம் பாதிக​கப்​பட்டு தின​மும் ஏராள​மான மருந்​து, மாத்​திரைகள் சாப்​பிட்டு வரு​கிறேன். தற்​போதைய சூழலில் வழக்கை எதிர்​கொள்ள இயலாது. எனவே, என் மீதான வன்​கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்​டும்’ என்று அதில் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, “இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி சம்​பந்​தப்​பட்ட விசா​ரணை நீதி​மன்​றத்​தில்​தான் மனு தாக்​கல் செய்ய முடி​யும்” என்று கூறி, மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளார்​.

நடிகை மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் முகாம் தொடக்கம்: 8 இடங்களில் நடைபெறுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in