ரயில் மீது கல் வீசியவர் சிறையில் அடைப்பு

ரயில் மீது கல் வீசியவர் சிறையில் அடைப்பு
Updated on: 
1 min read

சென்னை: வியாசர்​பாடி அருகே திரு​வனந்​த​புரம் விரைவு ரயில் மீது கல்​வீசி தாக்​குதல் நடத்​திய வழக்​கில், ஒரு​வரை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தி​லிருந்து திரு​வனந்​த​புரத்​துக்கு விரைவு ரயில் கடந்த 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்​பட்​டது.

இந்த ரயிலை ஈரோடு பிரிவைச் சேர்ந்த லோகோ பைலட் சரவணன் மற்​றும் உதவி லோகோ பைலட் விதுன் ஆகியோர் இயக்​கினர்.

இந்த ரயில் வியாசர்​பாடி ரயில் நிலை​யத்​தைக் கடந்து சென்று கொண்​டிருந்​த​போது, தண்​ட​வாளத்​தின் ஓரத்​தி​லிருந்து மர்ம நபர் ஒரு​வர், ரயி​லின் மீது திடீரென கற்​களை வீசினார்.

இதில் ரயி​லின் எஞ்​சின் முன்​பக்​கக் கண்​ணாடி பயங்​கர சத்​தத்​துடன் உடைந்து சிதறியது. இதில், உதவி லோகோ பைலட் விதுன் தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டது.

இச்​சம்​பவம் குறித்து, பெரம்​பூர் ரயில்வே போலீ​ஸார் 3 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து, ரயில் மீது கல்​வீசி தாக்​குதல் நடத்​திய குற்​றவாளியை தேடி வந்​தனர்.

முதல்​கட்​ட​மாக, சம்​பவம் நடந்த இடத்​தில் பதிவான சிசி​டிவி காட்​சிகளை ஆய்வு செய்​த​போது, ஒரு​வர் சம்​பவம் நடை​பெற்ற நேரத்​தில் நடந்து சென்​றது தெரிய​வந்​தது.

அந்த நபரின் அடை​யாளங்​களை வைத்து குற்​றவாளியை உறுதி செய்து, சம்​பந்​தப்​பட்ட நபரை நேற்று கைது செய்து, பெரம்​பூர் ரயில்வே காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வந்​தனர்.

பின்​னர் அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அந்த நபர் புளியந்​தோப்பு குருசாமி நகரைச் சேர்ந்த முகமது சபீர் (21) என்​ப​தும், போதையில் ரயில் மீது கல்​வீசி​யதும் தெரிய​வந்​தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரயில் மீது கல் வீசியவர் சிறையில் அடைப்பு
அக்டோபரில் பதிவுத்துறை வருவாய் ரூ.1,950 கோடி: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

X