தமிழிசை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது

நாச்​சி​முத்து

நாச்​சி​முத்து

Updated on
1 min read

சென்னை: சென்னை மத்​திய (கிழக்​கு) மாவட்ட பாஜக தலை​வர் பி.கிரி கடந்த 3-ம் தேதி சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரி​வில் (சைபர் க்ரைம்) ஒரு புகார் கொடுத்​தார்.

அதில், ‘தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜனின் கண்​ணி​யத்​துக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் சில சமூக வலை​தளங்​களில் அவதூறான தகவல்​கள், ‘மார்​பிங்’ படங்​கள் தொடர்ந்து வெளி​யிடப்​படு​கின்​றன.

இதில் தொடர்பு உடைய​வர்​களை கைது செய்ய வேண்​டும்’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. சைபர் க்ரைம் போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட முகநூல் கணக்கை ஆய்வு செய்தபோது திண்​டுக்​கல் மாவட்​டம் பழநியைச் சேர்ந்த நாச்​சி​முத்து (46) என்​பவர் இயக்கி வந்​தது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, போலீஸார் அவரை கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி புழல் சிறை​யில் அடைத்​தனர்​.

<div class="paragraphs"><p>நாச்​சி​முத்து</p></div>
ஆர்.கே.நகர், திருவெறும்பூர் உள்ளிட்ட தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in