16 வயது சிறுமி தற்கொலை: உண்மையான காரணத்தை போலீஸ் மறைத்ததாக பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

சிறுமி தற்கொலைக்கு காரணமான நபரை கைதுசெய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி தற்கொலைக்கு காரணமான நபரை கைதுசெய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated on: 
1 min read

மாமல்லபுரம்: திரு​மண​மான நபர் தன்னை காதலிக்க வலியுறுத்​தி​ய​தால், 16 வயது சிறுமி தற்​கொலை செய்து கொண்ட நிலை​யில், வேறு காரணத்​தைக் கூறி வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸாரைக் கண்​டித்​தும், சம்​பந்​தப்​பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்​தி​யும் பெற்​றோர், உறவினர்​கள் சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் அருகே 16 வயது சிறுமியை காதலிக்க வலியுறுத்தி, அதே பகுதி​யைச் சேர்ந்த திரு​மண​மான அலெக்ஸ்(24) என்ற நபர் தொடர்ந்து சிறுமிக்கு தொந்​தரவு அளித்​த​தாக கூறப்​படு​கிறது.

இத​னால் மன உளைச்​சல் ஏற்​பட்டு சிறுமி நேற்று முன்​தினம் விஷம் அருந்​தி​ய​தாகத் தெரி​கிறது. இதையடுத்து, பெற்​றோர் சிறுமியை மீட்டு செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயி​ரிழந்​தார். ஆனால் திருக்​கழுக்​குன்​றம் போலீ​ஸார் பள்​ளிக்​குச் செல்​லாமல் இருந்​ததை பெற்​றோர் கண்​டித்​ததால், சிறுமி தற்​கொலை செய்து​கொண்​ட​தாக தவறாக வழக்​குப் பதிவு செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இத​னால் ஆத்​திர மடைந்த பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் போலீ​ஸாரை கண்​டித்து திருக்​கழுக்​குன்​றம்-மாமல்​லபுரம் செல்​லும் சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மேலும், சிறுமி​யின் உடலை வாங்க மறுத்​தனர்.

இதையடுத்து திருக்​கழுக்​குன்​றம் போலீ​ஸார் போராட்​டத்​தில் ஈடு​பட்ட நபர்​களிடம் சமாதான பேச்சு​வார்த்​தையில் ஈடு​பட்​டனர். மேலும் உரிய நட​வடிக்கை எடுப்​ப​தாக உறுதி​யளித்​தனர். இத​னால் போராட்​டம் கைவிடப்பட்டது. எனினும் சம்​பந்​தப்​பட்ட நபரை கைது செய்​தால் மட்​டுமே சிறுமி​யின் உடலை வாங்​கு​வோம் என எச்​சரித்​தனர்.

<div class="paragraphs"><p>சிறுமி தற்கொலைக்கு காரணமான நபரை கைதுசெய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p></div>
தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால் விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? - நயினார் நாகேந்திரன் கேள்வி

X