

சென்னை: சவாரிக்கு வர மறுத்ததால் ஆத்திரத்தில் ஓட்டுநரை தாக்கி, ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருவேற்காடு ஆழியார் ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு (30). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 19ம் தேதி இரவு, தனது மனைவியை அழைத்து வருவதற்காக வானகரம் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர், பாபுவின் ஆட்டோவை வழிமறித்து, சவாரி போக வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பாபு, மறுப்பு தெரிவித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர், கீழே கிடந்த கட்டையை எடுத்து, பாபுவை தாக்கினார். இது குறித்து பாபு அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பாபுவை தாக்கியவர் கார்த்திக் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.