

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு தாயாருடன் வந்த 9 வயது சிறுமி, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அருகில் வசித்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்நத பாபு(60) என்ற முதியவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட பாபு-வுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.