மாதவரத்தில் பிரபல கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்தபோது போலீஸ் நடவடிக்கை
ரவுடி கணேஷ் தாக்கியதில் காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ்குமாரிடம் நலம் விசாரிக்கும் கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார். உள்படம்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கணேஷ்.

ரவுடி கணேஷ் தாக்கியதில் காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ்குமாரிடம் நலம் விசாரிக்கும் கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார். உள்படம்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கணேஷ்.

Updated on
2 min read

சென்னை: ​கொலை, கொள்ளை என 30 வழக்​கு​களில் தொடர்​புடைய பிரபல ரவுடி ‘தொப்​பை’ கணேஷ்,சென்னை மாதவரத்​தில் நடந்த என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை புழல் கிழக்கு காவாங்​கரை மகாவீர் கார்​டன் பகு​தியை சேர்ந்த ஜவுளி அதிபர் விஜயகு​மார், அவரது மனை​வி, தாய் மற்​றும் 2 மகள்​களை தாக்கி கட்​டிப்​போட்​டு, ரூ.25 லட்​சம் பணம், 30 பவுன் தங்​கம், வைர நகைகள் என ரூ.1 கோடி மதிப்​புள்ள பொருட்​களை முகமூடி கும்​பல் கடந்த ஜன.30-ம் தேதி கொள்​ளை​யடித்​தது.

இதுதொடர்​பாக காவல் ஆணை​யர் அருண் உத்​தர​வுப்​படி, புழல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, எண்​ணூர் ராகுல் (28), புழல் பிர​வீன் குமார் (28), வியாசர்​பாடி புகழேந்தி (25), திருத்​தணி அபிஷேக் (20), சோழ​வரம் ஜான்​சன் (25) ஆகிய 5 பேரை கடந்த பிப்​ர​வரி​யில் கைது செய்​தனர். கொள்​ளைக்கு மூளை​யாக செயல்​பட்​டது வியாசர்​பாடி பி.​வி.குடி​யிருப்பு பகு​தி​யைச் சேர்ந்த ‘ஏ’ பிளஸ் ரவுடி​யான ‘தொப்​பை’ கணேஷ் என்ற கணேஷ் (35) என்​பது தெரிய​வந்​தது. தலைமறை​வான அவர் ஆந்​தி​ரா​வில் பதுங்​கி​யிருப்​ப​தாக தகவல் கிடைத்து தனிப்​படை போலீ​ஸார் விரைந்து சென்​றனர்.

இதற்​கிடையே, ஆந்​தி​ரா​வில் இருந்து சென்​னைக்கு வந்த கணேஷ், மாதவரம் ரவுண்​டானா அருகே உள்ள பாழடைந்த கட்​டிடத்​தில் பதுங்​கி​யுள்​ள​தாக போலீ​ஸாருக்கு நேற்று அதி​காலை ரகசிய தகவல் கிடைத்​தது. திரு.​வி.க நகர் காவல் ஆய்​வாளர் பூப​தி​ராஜா, எஸ்​.ஐ. சுப்​பிரமணி, தலை​மைக் காவலர் தினேஷ் குமார் ஆகியோர் கொண்ட மற்​றொரு தனிப்​படை போலீ​ஸார் நேற்று அதி​காலை 5.45 மணிக்கு அங்கு சென்​று, கட்​டிடத்தை சுற்​றிவளைத்​தனர். சரணடை​யு​மாறு அவரை எச்​சரித்​தனர்.

தப்​பிக்க வாய்ப்பு இல்லை என்​பதை அறிந்த கணேஷ், கத்​தி​யால் போலீ​ஸாரை தாக்​கி​னார். இதையடுத்​து, ஆய்​வாளர் பூப​தி​ராஜா தற்​காப்​புக்​காக 2 முறை துப்​பாக்​கி​யால் சுட்​டுள்​ளார். 2 குண்​டு​கள் மார்​பில் பாய்ந்த நிலை​யில், கணேஷ் சுருண்டு விழுந்​தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாதவரம் போலீ​ஸார், துப்​பாக்​கிச்​சூட்​டில் காயமடைந்த ரவுடி கணேஷ் மற்​றும் அவர் தாக்​கிய​தில் காயமடைந்தஎஸ்​.ஐ. சுப்​பிரமணி, தலை​மைக் காவலர் தினேஷ்கு​மார் ஆகிய 3 பேரை​யும் ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அங்கு பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ரவுடி கணேஷ் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். 2 போலீ​ஸாருக்​கும் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. கணேஷ் பதுங்கி இருந்த இடத்​தில் இருந்து 3 கத்​தி​கள், 11 கிலோ கஞ்சா பொட்​டலங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

23 வயதில் கத்​தியை எடுத்​தவர்: என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்ட ரவுடி ‘தொப்​பை’ கணேஷ் 10-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். திரு​மணம் ஆக வில்​லை. பிரபல ரவுடி சேரா​வின்கூட்​டாளி​யாக வலம் வந்​தவர். இவர்​களது எதிர் தரப்​பைச் சேர்ந்த இடி​முரசு இளங்கோ கடந்த 2013-ம் ஆண்டு எம்​கேபி நகரில் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில்​தான் கணேஷ் 23 வயதில் முதன்​முதலாக சிக்​கி​னார். பின்​னர், வியாசர்​பாடி பழனி (2016), சோழ​வரம் கரிமேடு திவாகர் (2018) கொலை வழக்​கிலும் சிக்​கி​னார்.

2016-ம் ஆண்​டுக்கு பிறகு சென்னை மற்​றும் புறநகர் மாவட்​டங்​களில் பல்​வேறு கொள்​ளை, திருட்​டு​களி​லும் ஈடு​பட்டு வந்​தார். அதில், கிடைத்த நகை, பணத்தை கூட்​டாளி​களு​டன் பங்​கிட்​டு, உல்​லாச வாழ்க்கை வாழ்ந்​துள்​ளார். இதற்​காக ஒரு கும்​பலை தயார் செய்​து, பல கொள்ளை சம்​பவங்​களுக்கு மூளை​யாக செயல்​பட்​டுள்​ளார்.

வீடு புகுந்து கொள்​ளை​யடிக்​கும்​போது அங்​கிருப்​பவர்​களை கட்​டிப்​போட்​டு, அவர்​களை சித்​ர​வதை செய்​வதை வழக்​க​மாக வைத்​திருந்​தார். இவர் மீது 2 கொலை முயற்​சி, 2 கூட்​டுக் கொள்​ளை, 5 கொள்​ளை, 13 திருட்​டு, 4 ஆயுதச் சட்​டங்​கள், 2 வெடிபொருள் சட்​டங்​கள் என மொத்​தம் 30 வழக்​கு​கள் உள்​ளன. இவ்​வாறு போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, என்​க​வுன்ட்​டர் சம்​பவம் குறித்து மாஜிஸ்​திரேட் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்ட திரு​வேங்​கடம் மற்​றும் சீசிங் ராஜா, காக்கா தோப்பு பாலாஜி, தொடர் வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ஈரானி கொள்​ளை​யன் குலாம் ஆகியோரைத் தொடர்​ந்​து, தற்​போது தொப்பை கணேஷ் என கடந்த ஒன்​றரை ஆண்​டு​களில் 5 ரவுடிகள் போலீஸ் என்​க​வுன்​ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>ரவுடி கணேஷ் தாக்கியதில் காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ்குமாரிடம் நலம் விசாரிக்கும் கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார். உள்படம்:&nbsp;சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கணேஷ்.</p></div>
தவெகவில் ‘உள்ளடி’ அரசியல் தீவிரம்: வேட்பாளர்களை கண்டறிய விஜய் திணறல்?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in