வளவனூர் அருகே 3 மாதத்தில் காதல் மனைவி மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது புகார்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு முழக்கமிட்டபடி வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு முழக்கமிட்டபடி வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

Updated on
1 min read

விழுப்புரம்: வளவனூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் 3 மாதத்தில் தற் கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவ னூர் அடுத்த சொர்ணாவூர் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தராஜ். இவரது மனைவி தேவ ஜெசி பிரியா (22). இவர் கள் மூன்று மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த தேவ ஜெசி பிரியா இரு தினங்களுக்கு முன்பு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்துகொண்ட தேவ ஜெசி பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அழகப்பாசமுத்திரம் கிரா மத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் ரிச்சர்டு மற்றும் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களிடம், ஆட்சியரிடம் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தினர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் வழியாக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானுக்கு ரிச்சர்டு மனு அளித்தார்.

காவல் அவசர எண்ணில் புகார் செய்ததை தெரிந்துகொண்ட கணவர் குடும்பத்தினர் ஜன. 31-ம் தேதி எனது தங்கையை மீண்டும் தாக்கியுள்ளனர். இதுபற்றி எனது தங்கை தனது அத்தையிடம் கூறி அழுதுள்ளார்.

சிறிது நேரத்தில் அத்தையை தொடர்பு கொண்டு தேவஜெசி பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக வசந்தராஜ் தெரிவித் துள்ளார். தங்கையின் மரணத்தை எங்களால் ஏற்க முடியவில்லை.

அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடு கின்றனர். வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு முழக்கமிட்டபடி வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.</p></div>
மீண்டும் சூடுபிடிக்கும் கப்பலூர் சுங்கச் சாவடி பிரச்சினை - மதுரையில் நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in