காவல் நிலைய விசாரணையில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

ஆய்வாளர் உள்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்
காவல் நிலைய விசாரணையில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
Updated on: 
2 min read

மதுரை: மதுரை மாவட்​டம் செக்​கானூரணி காவல் நிலை​யத்​துக்கு ஏலக்​காய் லாரி தீப்​பற்​றிய வழக்கு விசா​ரணைக்கு அழைத்து வரப்​பட்ட தேனியைச் சேர்ந்த லாரி ஓட்​டுநர் மர்​மமான முறை​யில் உயி​ரிழந்​தார். காவல் நிலை​யத்​திற்​குள் போலீ​ஸாரே அவரை அடித்​துக் கொலை செய்​து​விட்​ட​தாக உறவினர்​கள் புகார் தெரி​வித்​தனர். இவ்​வழக்கு சிபி​சிஐடிக்கு மாற்​றப்​பட்டு, காவல் ஆய்​வாளர் உள்​பட 3 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

தேனி மாவட்​டம் உத்​தமபாளை​யம் வட்​டம் டி.அழகர்​நாயக்​கன்​பட்​டியைச் சேர்ந்த ரங்​கப்​பன் மகன் பால​கிருஷ்​ணன் (42). தனியார் நிறு​வனத்​தில் லாரி ஓட்​டுநராக இருந்​தார். நவ. 3-ம் தேதி அதி​காலை தேவாரத்​தி​லிருந்து மதுரைக்கு பார்​சல்​கள் மற்​றும் ஏலக்​காய் மூட்​டைகளை ஏற்​றிச் சென்​றார்.

உசிலம்​பட்டி அருகே வாலாந்​தூர் கண்​மாய்க்​கரை அருகே வாக​னம் திடீரென தீப்​பி​டித்​தது. இதில், வாக​னத்​தில் இருந்த சரக்​கு​கள் எரிந்து சேதமடைந்​தன. இது தொடர்​பாக பால​கிருஷ்​ணன் அளித்த புகாரின் பேரில் வாலாந்​தூர் காவல் நிலை​யத்​தில் தற்​செய​லாக நடந்த தீ விபத்து என வழக்​குப் பதி​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் காவல் ஆய்​வாளர் (பொறுப்பு) முத்து நேற்று முன்​தினம் மாலை செக்​கானூரணி காவல் நிலை​யத்​துக்கு பால​கிருஷ்ணனை அழைத்து வந்து விசா​ரித்​துள்​ளார். நேற்று காலை 6 மணி​யளவில் காவல் ஆய்​வாளரின் அறை அருகே உள்ள கழிப்​பறை​யில் பால​கிருஷ்​ணன் மர்​மமான முறை​யில் மயங்கி கிடந்​தார்.

ஆனால், அவர் முழுக்கை சட்​டையை ஜன்​னலில் கட்டி தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து​கொள்ள முயன்​றபோது மயக்க நிலை​யில் இருந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். மேலும், உடனடி​யாக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றதாகவும், அங்கு பரிசோதித்த மருத்​து​வர்​கள், அவர் வரும் வழி​யில் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​த​தாகவும் போலீ​ஸார் கூறினர்.

இந்​நிலை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற போலீ​ஸார், பால​கிருஷ்ணனை அடித்​துக் கொலை செய்​து​விட்​ட​தாக புகார் கூறி, அவரது குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​கள் காவல் நிலை​யத்தை நேற்று முற்​றுகை​யிட்​டனர்.

தென்​மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதாரி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் காவல் நிலை​யத்​தில் விசா​ரணை நடத்​தினர். சம்​பவத்​தின்​போது பணி​யில் இருந்த காவல் ஆய்​வாளர் முத்து, தலை​மைக் காவலர்​கள் பழனிவேல்​ராஜன், கலைச்​செல்வி ஆகியோர் உடனடி​யாக பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இச்​சம்​பவம் குறித்து நீதித்​துறை நடுவர் விசா​ரணை நடத்​தினார். மேலும், இவ்​வழக்கு விசா​ரணை சிபி​சிஐடிக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. பால​கிருஷ்ணனின் உடல் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது.

அவர் போலீ​ஸார் தாக்​கியதில் உயி​ரிழந்​தாரா அல்​லது விசா​ரணைக்கு பயந்து, போலீ​ஸார் கூறு​வதுபோல் தற்​கொலை செய்து கொண்​டாரா என்ற கோணத்​தில் சிபி​சிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இறப்​பில் மர்​மம் உள்​ளது: பால​கிருஷ்ணனின் மனைவி சுதா செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘நவ. 12-ல் செக்​கானூரணி போலீ​ஸார் எனது கணவருடன் 9 பேரை அழைத்து விசா​ரித்​தனர். பின்​னர், அவர்​களை அனுப்​பி​விட்டு, எனது கணவரை மட்​டும் இர​வில் காவல் நிலை​யத்​தில் தங்க வைத்​தனர்.

அப்​போது, என்​னிடம் செல்​போனில் பேசிய கணவர், ‘தீ விபத்து வழக்கை என் மீது பதிய போலீ​ஸார் திட்​ட​மிடு​கின்​றனர். என்னை ஒத்​துக்​கொள்​ளு​மாறு போலீ​ஸார் அழுத்​தம் கொடுக்​கின்​றனர். விசா​ரணை முடிந்​ததும் காலை​யில் வீட்​டுக்கு வரு​கிறேன்’ என்​றார்.

ஆனால் நேற்று (நவ. 14) காலை போலீ​ஸார் என்​னிடம் செல்​போனில் தொடர்​பு​கொண்டு, கணவர் தற்​கொலை செய்து​கொண்​ட​தாகத் தெரி​வித்​தனர். எனது கணவர் தற்​கொலை செய்​யும் அளவுக்கு கோழை இல்லை. அவரது இறப்பு மர்​மமாக உள்​ளது. உரிய நீதி கிடைக்க வேண்​டும்’ என்று கூறினார்.

காவல் நிலைய விசாரணையில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா | U-19 Asia Cup

X