பர்தா அணிந்து மூதாட்டியிடம் கைவரிசை - தாய் கைது, தப்பிய மகளுக்கு வலை

பர்தா அணிந்து மூதாட்டியிடம் கைவரிசை - தாய் கைது, தப்பிய மகளுக்கு வலை
Updated on: 
1 min read

சென்னை: திருவொற்றியூர் மார்க்கெட் சாலையில் வாழைப்பழம் வியாபாரம் செய்பவர் ஆந்திராவைச் சேர்ந்த பத்மா (65). இவரது கடைக்கு கடந்த 7-ம் தேதி இரவு பர்தா அணிந்த 2 பெண்கள் வந்து 7 டஜன் வாழைப்பழங்கள் கேட்டுள்ளனர்.

அருகே உள்ள குடோனுக்கு அவர்களை பத்மா அழைத்துச் சென்று காண்பித்துள்ளார். மறுநாள் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர். பின்னர், கடைக்குத் திரும்பிய பத்மா ரூ.15 ஆயிரம் வைத்திருந்த சுருக்குப்பை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீஸார் நடத்திய விசாரணையில், புரசைவாக்கம் வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்த உதயகுமாரியும் (43) அவரது மகளும் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இருவரும் ஏற்கெனவே இதேபோல ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.

பத்மாவிடம் திருடிய ரூ.15 ஆயிரத்தில் செலவு செய்தது போக மீதி ரூ.2 ஆயிரம், மற்ற வழக்குகளில் திருடப்பட்ட சுமார் 5 பவுன் தங்க நகைகள், 540 கிராம் வெள்ளி நகைகளை போலீஸார் மீட்டனர். உதயகுமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மகளை தேடி வருகின்றனர்.

பர்தா அணிந்து மூதாட்டியிடம் கைவரிசை - தாய் கைது, தப்பிய மகளுக்கு வலை
தொழிலதிபரிடம் ரூ.2.64 கோடி மோசடி: பெண் கைது

X