கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு

ஆய்வாளர் சுவர்ணவள்ளி

ஆய்வாளர் சுவர்ணவள்ளி

Updated on
1 min read

கோவை: கோவை​யில் பெண் காவல் ஆய்​வாளரை அரி​வாளால் வெட்​டியவரை போலீ​ஸார் துப்​பாக்​கிச் சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகரில் நேற்று முன்​தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாக​னத்​தில் கடத்​திச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக போலீ​ஸாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலைய போலீ​ஸார் கஞ்​சிக்​கோணாம்​பாளை​யம் பகு​தி​யில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்​கொடுமை செய்ததாக சந் தோஷ், தவசி ஆகிய இருவரை​யும் போக்சோ வழக்​கில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைதான தவசி​யிடம் நடத்திய விசா​ரணை​யில், சிறுமியை மிரட்​டு​வதற்கு பயன்​படுத்​திய அரி​வாளை மறைத்து வைத்​திருக்​கும் இடத்தை அடை​யாளம் காட்​டு​வ​தாக தெரி​வித்​துள்​ளார். அதன்​பேரில், காவல் ஆய்​வாளர் சுவர்​ண​வள்ளி தலை​மையி​லான போலீ​ஸார் உடன் சென்​ற​னர். அப்​போது மறைத்து வைத்​திருந்த அரி​வாளை திடீரென எடுத்த தவசி, ஆய்​வாளர் சுவர்​ண​வள்​ளியை வெட்​டி​விட்டு அங்​கிருந்து தப்​பியோட முயன்​றார்.

இதனால் தற்​காப்புக்காக உதவி ஆய்​வாளர் சிலம்பரசன் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், தவசி​யின் இடது காலில் குண்டு பாய்ந்தது. பின்​னர் அவர் கோவை அரசு மருத்​து​வ மனையில் சேர்க்​கப்​பட்​டார். காயமடைந்த காவல் ஆய்​வாளர் சுவர்​ண​வள்​ளி​யும் அதே மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்​சை பெற்​று வரு​கி​றார்​.

<div class="paragraphs"><p>ஆய்வாளர் சுவர்ணவள்ளி</p></div>
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in