தாம்பரம்: பெண்ணின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு

தாம்பரம்: பெண்ணின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
Updated on: 
1 min read

தாம்பரம்: சிட்​லப்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் புவனேஸ்​வரி (24). எம்​பிஏ பட்​ட​தா​ரி​யான இவர் தாம்​பரத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் கடந்த ஒரு மாத கால​மாக வேலை செய்து வரு​கிறார். முதல்​மாத ஊதி​யம் வாங்​கிய​தால், மகிழ்ச்​சியை பகிர்ந்​து​கொள்ள ஆதர​வற்​றோருக்கு இனிப்பு வழங்க திட்​ட​மிட்​டார்.

அதன்​படி, நேற்று முன்​தினம்இரவு பணி முடித்து வீட்​டுக்​குச்செல்​லும் வழியில் தாம்​பரம் சானடோரி​யம் அருகே உள்ள நடைமேம்​பாலத்​தின் மீது தூங்​கிக் கொண்​டிருந்த ஆதர​வற்ற நபர்​களுக்கு தனது முதல் மாத ஊதி​யத்​தில் வாங்​கிவந்த லட்​டுவை கொடுத்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு வந்த நபர் பெப்பர் ஸ்பிரேயை புவனேஸ்​வரி​யின் முகத்​தில் அடித்​தார். இதனால் கண்​களில் எரிச்​சல் ஏற்​பட்டுதுடித்​துக் கொண்​டிருந்த புவனேஸ்​வரி​யின் கழுத்​தில் அணிந்​திருந்த 3 பவுன் தங்​கச் செயினைஅந்த நபர் பறிக்க முயன்​ற​தாகதெரி​கிறது.

இதனால் புவனேஸ்​வரி கூச்​சலிட்​டார். அப்​போதுஅங்கு இருந்தவர்கள் சேர்ந்துசெயின் பறிக்க முயன்ற நபரைமடக்​கிப் பிடித்து தாம்​பரம் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

பிடிபட்ட நபரிடம் தாம்​பரம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​ட​தில் அவர் பெயர் குப்​பு​சாமி (46), ஓஎம்​ஆரில் உள்ள ஐடி நிறு​வனத்​தில் பணிபுரிபவர் என்​பது தெரிய​வந்​தது.

மேலும் பம்​மலில் சொந்த வீட்​டில் வசித்து வந்த அவர், ஆன்​லைன்டிரேடிங்​கில் பல லட்​சம் ரூபாயை இழந்​துள்​ளார். கடன் கொடுத்​தவர்​கள் தொடர்ந்து நெருக்​கடி கொடுத்​த​தால், தனது வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்து வீட்டை விற்​றார்.

ஆனால் வீடு விற்ற பணம் ரூ.60 லட்​சத்தை கடன்​காரர்​களுக்கு கொடுக்​காமல், மீண்​டும் ஆன்​லைன் டிரேடிங்​கில் பணத்தை மொத்​த​மாக இழந்​தார் என்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

தற்​போது மேல்​மரு​வத்​தூரில் குடும்​பத்​துடன் வசித்து வரும் இவர், கடன் தொல்​லை​யி​லிருந்து தப்ப செயின் பறிப்​பில் ஈடுபட எண்ணி பெப்​பர் ஸ்பிரே வாங்கி முதல் முறை​யாக புவனேஸ்​வரி​யிடம் செயின் பறிப்​பில் ஈடு​பட்​ட​போது சிக்​கி​யுள்​ளார் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். குப்​பு​சாமி மீது வழக்​குப்​ப​திவு செய்த தாம்​பரம் போலீ​ஸார், அவரை நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி சிறை​யில்​ அடைத்​தனர்​.

தாம்பரம்: பெண்ணின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

X