சென்னை | ரயில் நிலையத்தில் பயணியிடம் 9.4 பவுன் நகை திருடியவர் கைது

சென்னை | ரயில் நிலையத்தில் பயணியிடம் 9.4 பவுன் நகை திருடியவர் கைது
Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் பயணி​யிட​மிருந்து 9.4 பவுன் நகையை திருடிய நபர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை மயி​லாப்​பூர் நொச்​சிக்​குப்​பத்தை சேர்ந்​தவர் பால​முரு​கன்​(40).

இவர் கடந்த ஜன. 27-ம் தேதி மனை​வி, 2 குழந்​தைகளு​டன் சொந்த ஊரான மானாமதுரைக்கு முத்​துநகர் விரைவு ரயி​லில் புறப்​பட்​டார். அந்த ரயி​லின் பொதுப் பெட்​டி​யில் ஏறி தனது பையை கீழே வைத்​து​விட்டு அமர்ந்​திருந்​தார். சிறிது நேரத்​தில் அந்தப் பை மாயமாகி இருந்​தது.

அதிர்ச்சி அடைந்த அவர், எழும்​பூர் ரயில்வே போலீ​ஸில் புகார் கொடுத்​தார். சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்த போலீஸார், அதனடிப்படையில் தீவிர​மாக தேடி, நகை பையை திருடியவரை சுற்​றிவளைத்து கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் அந்த நபர் சென்னை எர்​ணாவூரைச் சேர்ந்த பிர​காஷ்(40) என்​பதும், பால​முரு​க​னின் நகைகளை திருடிச் சென்​றதும் உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து அவரிட​மிருந்து நகைகளை பறி​முதல் செய்​தனர். தொடர்ந்து எழும்​பூர் நீதி​மன்ற நீதிப​தி முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை | ரயில் நிலையத்தில் பயணியிடம் 9.4 பவுன் நகை திருடியவர் கைது
மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in