மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவர் கைது

கைதான சரவணன்

கைதான சரவணன்

Updated on: 
1 min read

பூந்தமல்லி: திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வேற்​காடு அருகே மேல் அயனம்​பாக்​கம், சந்​திரமவுலீஸ்​வரர் கோயில் தெரு​வில் உள்ள தரைக் கிணற்​றில் அழுகிய நிலை​யில் ஆண் சடலம் ஒன்று கடந்த 22-ம் தேதி மிதந்து கொண்​டிருந்​தது. தகவலறிந்த திரு​வேற்​காடு போலீ​ஸார் அந்த சடலத்தை மீட்டு விசா​ரணை நடத்​தினர்.

அதில் உயி​ரிழந்​தவர் திரு​வேற்​காடு- சின்ன கோலடியைச் சேர்ந்த கட்​டிடத் தொழிலாளி பாஸ்​கர் (44) என்​பதும், இவருக்கு மனைவி சந்​தி​யா(34), 2 மகன்​கள் இருப்​பதும் தெரிய​வந்​தது.

தொடர்ந்து போலீ​ஸார், பாஸ்​கர் உடலை பிரேதப் பரிசோதனைக்​காக சென்​னை, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். பிறகு வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்து தீவிர விசா​ரணை நடத்​தினர்.

அவ்​வி​சா​ரணை​யில், கடந்த 20-ம் தேதி பாஸ்​கரும், அவரது நண்​பருமான சரவணன் (37) என்​பவரும் அதே பகு​தி​யில் உள்ள கிணற்​றின் அரு​கில் அமர்ந்து மது அருந்​தி​யுள்​ளனர்.

அப்​போது இரு​வருக்​கும் இடையே ஏற்​பட்ட வாக்​கு​வாதம் முற்​றியதன் விளை​வாக பாஸ்​கரனை சரவணன் கிணற்​றில் தள்​ளிக் கொலை செய்​து ​விட்டு அங்​கிருந்து தப்​பியோடியது தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த சரவணனை போலீ​ஸார்​ நேற்​று கைது செய்​தனர்​.

<div class="paragraphs"><p>கைதான சரவணன்</p></div>
படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவர்கள்: பள்ளிக் கல்வித்துறை விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in