சென்னை: கல்லூரி மாணவியிடம் அத்துமீறியவர் கைது

சென்னை: கல்லூரி மாணவியிடம்  அத்துமீறியவர் கைது
Updated on: 
1 min read

சென்னை: ஜார்​க்கண்ட் மாநிலம் ராஞ்​சி​யைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒரு​வர், கோட்​டூர்புரத்தில் விடுதி​யில் தங்கி அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரு​கிறார்.

இவர் கடந்த 17-ம் தேதி நடைப்​பயிற்​சி​யின் போது அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​து​விட்டு தப்​பினார்.

இது​குறித்த புகாரின்பேரில் கோட்​டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது அடையாறில் உள்ள பிரபல தனியார் பள்​ளி​யில் உடற்​கல்வி ஆசிரியராக பணி​யாற்றி வரும் அரவிந்த் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்​தனர். அர​விந்​தின் தந்தை விசிகவின் முக்கிய பிரமுகராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: கல்லூரி மாணவியிடம்  அத்துமீறியவர் கைது
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய முறுக்கு உற்பத்தி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

X