சென்னை: பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டவர் கைது

சென்னை: பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டவர் கைது
Updated on
1 min read

சென்னை: பெண்ணை ரகசி​ய​மாக செல்​போனில் படம் பிடித்​து, சமூக வலை​தளத்​தில் ஆபாச​மாக பதி​விட்ட பட்​ட​தாரி இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை டி.பி.சத்​திரம் பகு​தி​யைச் சேர்ந்த 33 வயது பெண் ஒரு​வர், அப்​பகு​தி​யில் வீட்டு வேலை செய்து வரு​கிறார். இவர் சில நாட்​களுக்கு முன்பு தனது வீட்​டில் நைட்டி அணிந்து பாத்​திரம் கழு​விக் கொண்​டிருந்​தார்.

அவரை ஒரு நபர் தனது செல்போனில் ரகசி​ய​மாக படம் பிடித்​து, அத்​துடன் ஆபாச குரல் பதிவு​களை​யும் இணைத்து சமூக ஊடகத்​தில் வெளி​யிட்​டார். இதுகுறித்து அப்​பெண் டி.பி.சத்​திரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

விசா​ரணை​யில் டி.பி.சத்​திரத்​தைச் சேர்ந்த பரத்(28) என்ற பி.காம். பட்டதாரி மீது சந்​தேகம் எழுந்தது. அவரது செல்​போனை ஆய்வு செய்​த​தில், பல பெண்​களை ரகசி​ய​மாக படம் பிடித்​து, தனது சமூக வலைதள பக்​கத்​தில் ஆபாச​மாக பதிவேற்​றம் செய்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, பரத் மீது, பெண் வன்​கொடுமை தடுப்பு சட்​டம், தகவல் தொழில் ​நுட்​பச் சட்​டம் உள்பட பல பிரிவு​களின் கீழ் வழக்​குப்பதிந்து நேற்று முன்​தினம்​ அவரை கைது செய்தனர்.

சென்னை: பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டவர் கைது
எழும்பூர் நடைமேம்பால பணிகளால் மலைக்கோட்டை உட்பட 9 விரைவு ரயில்களின் சேவை​ நாளை முதல் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in