வண்டலூர்: வீட்டில் தூங்கிய 3 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர் கைது

வண்டலூர்: வீட்டில் தூங்கிய 3 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர் கைது
Updated on: 
1 min read

வண்டலூர்: செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அடுத்த மண்ணி​வாக்​கம் புதுநகர் பகு​தி​யில், ஓட்​டேரி காவல் நிலை​யம் எதிரே வசித்து வருபவர் சூர்​யா. இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 4 குழந்​தைகள் உள்​ளனர். இவர்​களது 3 வயது மகள் கிருத்திக் ஷா நேற்று காலை வீட்​டில் தூங்​கிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் வீட்​டுக்​குள் நுழைந்​து, குழந்​தையை தூக்​கிச் செல்ல முயன்​றுள்​ளார். குழந்தை​யின் அழுகை சத்​தம் கேட்டு பெற்​றோர் அங்கு வந்துள்ளனர். அவர்​களை அந்த நபர் கற்​கள் உள்​ளிட்ட பொருட்களை காட்டி மிரட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து பெற்​றோர் சத்​தமிட்​டுள்​ளனர். சத்​தம் கேட்டு அக்கம் பக்​கத்​தினர் திரண்டு வந்த நிலை​யில், குழந்​தை​யுடன் தப்பிச் செல்ல முயன்ற நபரை சுற்​றிவளைத்​துப் பிடித்​தனர்.

தகவலின் பேரில் ஓட்​டேரி போலீ​ஸார் விரைந்து வந்​து, அந்த ​நபரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசாரணை நடத்​தினர். இதில் அவர் தனது பெயர், முகவரி உள்​ளிட்ட விவரங்களை மாற்றி மாற்றி தெரி​வித்​த​தாகக் கூறப்படு​கிறது. இதனால் அவரது அடை​யாளம் மற்​றும் பின்​னணி குறித்து போலீஸார் விசா​ரணை மேற்​கொண்டு வருகின்றனர்.

வண்டலூர்: வீட்டில் தூங்கிய 3 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர் கைது
2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in