பொத்தேரியில் டாரஸ் லாரி மோதி அண்ணன் கண் முன்பு தம்பி உயிரிழப்பு

பொத்தேரியில் டாரஸ் லாரி மோதி அண்ணன் கண் முன்பு தம்பி உயிரிழப்பு
Updated on
1 min read

மறைமலை நகர்: காஞ்சி மாவட்டம், படப்பை அருகே உள்ள ஏரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் (20), இவர் பொத்தேரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தம்பி வைபவுடன் (16), நேற்று முன்தினம் பைக்கில் பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்தார். பொத்தேரி ரயில் நிலையம் எதிரே செல்லும் போது பின்னால் வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வைபவ் பலத்த காயம் அடைந்து அண்ணன் கண் முன்னர் உயிரிழந்தார். காயமடைந்த லோகித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருப்போரூரை அடுத்த பொன்மார் மலைத்தெருவை சேர்ந்த ஆனந்த ராஜ் (31), நேற்று முன்தினம் மணிக்கு பஜாஜ் பல்சர் பைக்கில் புதுப்பாக்கம் - தாழம்பூர் சாலையில் சென்றபோது தாழம்பூர் சீனிவாச நகர் ஸ்ரீராம் ஸ்டீல்ஸ் கடை அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையின் பின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில், அந்த வழியாக சென்றவர் ஆனந்தராஜை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொத்தேரியில் டாரஸ் லாரி மோதி அண்ணன் கண் முன்பு தம்பி உயிரிழப்பு
ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in