நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: நிலம் விற்​பனை விவ​காரத்​தில் மோசடியில் ஈடு​பட்​டதோடு ஜாதி பெயரை குறிப்​பிட்டு திட்​டிய​தாக திமுக எம்​.பி. மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: கரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் அன்​பரசு (67). ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். இவரிடம் தொழில் அதிபர் ஒரு​வருக்​குச் சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலத்​தின் பொது அதி​காரப் பத்​திரம் இருந்​துள்​ளது.

அதேவேளை​யில் அந்த நிலம் வங்​கி​யில் அடமானம் வைக்​கப்​பட்​டிருந்​தது. அந்த நிலத்தை விற்க அன்​பரசு முயன்று வந்​துள்​ளார். அதன்​படி, வட சென்னை திமுக எம்பி கலாநிதி வீரா​சாமி மகனும், தனி​யார் நிறு​வனத்​தின் நிர்​வாகி​யு​மான சித்​தார்த்தை அணுகி உள்​ளார்.

இதில் இருதரப்​புக்​கும் இடையே நிலத்தை விற்​பது தொடர்​பாக உடன்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து அன்​பரசு, அந்த நிலம் தொடர்​பான ஆவணங்​கள், பொது அதி​கார பத்திரம் ஆகியவற்றை சித்​தார்த் தரப்​பிடம் தந்துள்​ளார்.

ஆனால், இந்த விவ​காரத்​தில் சித்​தார்த் தரப்​பு, தாங்​கள் ஒப்​புக்​கொண்​டபடி அன்​பரசுக்கு பணத்தை கொடுக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. அன்​பரசு, தனக்கு பேசிய தொகையை தரும்​படி சித்​தார்த் தரப்​பிடம் தொடர்ந்து கேட்​டுள்​ளார். அப்​போது வாய்த் தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

சித்​தார்த் தரப்​பு, அன்​பரசுவை ஜாதியை சொல்லி திட்டி மிரட்​டி​ன​ராம். இதுகுறித்​து, அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் 2024-ல் அன்​பரசு பு​கார் அளித்​தார். ஆனால், நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் சில தினங்​களுக்கு முன்​பு அன்​பரசு மீண்​டும் புகார் செய்​துள்​ளார். அதன்​படி, போலீ​ஸார் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம், மோசடி உட்பட 5 பிரிவு​களின் கீழ் சித்​தார்த், கலாநிதி வீரா​சாமி எம்​பி​யின் உதவி​யாளர் ஆசைத்​தம்​பி, மாநக​ராட்சி 102-வது வார்டு திமுக கவுன்​சிலர் ராணி ரவிச்​சந்​திரன், விருதுநகரைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் ஆகிய 4 பேர்​ மீது வழக்​கு பதிந்துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழக மக்கள் மீது முதல்வருக்கு அக்கறையில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in