சென்னை | வேறொருவரின் நிலத்தைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது

சென்னை | வேறொருவரின் நிலத்தைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது
Updated on
1 min read

சென்னை: வீட்டு மனையை விற்​பதாக வேறொரு​வரின் நிலத்தை காட்டி ரூ.15 லட்​சம் பண மோசடி செய்த நிலபுரோக்​கர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, சாலிகி​ராமம், பொன்​னியம்​மன் கோவில் தெரு​வைச் சேர்ந்​தவர் பாலச்​சந்​தர் (45).

இவரது நண்​பர் மூலம், காஞ்​சிபுரம் மாவட்​டம், உத்​திரமேரூர் அருகே உள்ள எலப்​பாக்​கத்​தைச் சேர்ந்த பாஸ்​கரன் (51) என்​பவர் கடந்​தாண்டு அறி​முக​மா​னார். நிலத்​தரக​ரான பாஸ்​கரன், பாலச்​சந்​தரிடம் தனக்கு எலப்​பாக்​கத்​தில் 2 வீட்டு மனை​கள் இருப்​ப​தாக​வும், அதை விற்க உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இதை நம்​பிய பாலச்​சந்​தர், அந்த வீட்டு மனை​களை வாங்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, இரு​வரும் பேசி, அந்த வீட்​டுமனை​களுக்கு ரூ.15 லட்​சம் விலை நிர்​ண​யம் செய்​துள்​ளனர். இழுத்தடிப்பு இதையடுத்​து, பாலச்​சந்​தர், பாஸ்​கரனிடம் ரூ.15 லட்​சத்தை கொடுத்​தார்.

ஆனால், பாஸ்​கரன், அந்த வீட்​டு மனை​களை பத்​திரப் பதிவு செய்து கொடுக்​காமல் இழுத்​தடித்து வந்​துள்​ளார். இதனால், சந்​தேகமடைந்த பாலச்​சந்​தர், அந்த வீட்​டுமனை​களின் ஆவணங்​களை சரி பார்த்​தார்.

அப்​போது, அந்த வீட்​டு மனை​கள் பாஸ்​கரனுக்கு சொந்​த​மானது இல்லை என்​பதும், அடுத்​தவருக்கு சொந்​த​மான நிலத்தை காட்டி தன்​னிடம் ரூ.15 லட்​சத்தை பாஸ்​கரன் மோசடி செய்​திருப்​ப​தை​யும் அறிந்து அதிர்ச்​சி​யடைந்​தார்.

இதுதொடர்​பாக, விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் பாலச்​சந்​தர் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து பாஸ்​கரனை கைது செய்​தனர்​.

சென்னை | வேறொருவரின் நிலத்தைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது
தாம்பரத்தில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ நல்லாதரவு மையம்: விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in