

பெங்களூரு: கர்நாடகாவில் காதலனுடன் மனைவி சென்றதால் கணவன் மற்றும் தரகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கும்மனூரை சேர்ந்தவர் ஹரீஷ்குமார் (30). இவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர் சரஸ்வதி (27) என்ற பெண்ணுடன் திருமணமானது. இருவருக்கும் திருமண தரகர் ருத்ரேஷ் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி சரஸ்வதி காணாமல் போனார். இதுகுறித்து, ஹரீஷ் குமார் போலீஸில் புகார் அளித்தார்.
இதற்கிடையில் கடந்த 27-ம் தேதி சரஸ்வதி தனது காதலன் சிவகுமாரை (28) திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதில் இரு குடும்பத்தாருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால், அவமானம் தாங்காத ஹரீஷ்குமாரும், ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரஸ்வதி, சிவகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.