சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவருக்கு சிறை

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவருக்கு சிறை
Updated on
1 min read

திருப்பூர்: ​திருப்​பூரில் உரிய ஆவணங்​கள் இன்றி தங்​கி​யிருந்த வங்​கதேசத்தவர் 3 பேருக்கு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

திருப்​பூர் தெற்கு காவல் நிலை​யத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் கடந்த 2024 செப்​.29-ல் சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் வங்​கதேசத்தை சேர்ந்த முகமது மானிக் உசேன், சுலை​மான் மற்​றும் முகமது ரகு​மான் என்​பதும் அவர்​கள் சட்​ட​விரோத​மாக திருப்​பூரில் தங்கி பணி​யாற்றிவந்​ததும் தெரிந்தது. இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்து அவர்​களை கைது செய்​தனர்.

இதுதொடர்​பான வழக்கு திருப்​பூர் மாவட்ட குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றம் எண் 2-ல் நடை​பெற்று வந்​தது. இந்த வழக்கு மீதான விசா​ரணை நிறைவடைந்து நீதிபதி கனக​ராஜ் தீர்ப்பு அளித்​தார். இதில் சுலை​மானுக்கு 3 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.16 ஆயிரம் அபராத​மும், முகமது மானிக் உசேன், முகமது ரகு​மான் ஆகியோருக்கு தலா 2 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறைதண்​டனை​யும், தலா ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டார். இந்த வழக்​கில் அரசு தரப்​பில் வழக்​கறிஞர் பூமதி ஆஜராகி​னார்.

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவருக்கு சிறை
“மைலேஜ் குறைந்துவிட்டது” - E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in