பல்லடம் அருகே ‘இன்ஸ்டாகிராம்’ காதலால் விபரீதம்: தாய், மகளை கொன்ற காதலன் கைது

பூவரசி, அக் ஷய்

பூவரசி, அக் ஷய்

Updated on
1 min read

திருப்பூர்: ​திருப்​பூர் மாவட்​டம் பல்​லடம் அருகே இன்​ஸ்​டாகி​ராம் மூல​மாக ஏற்​பட்ட காதல் விவ​காரத்​தில், தாய், மகளை கொலை செய்​த​தாக காதலனை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பல்​லடம் அருகே உள்ள பச்​சா​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் பழனி​சாமி. இவரது மனைவி தனலட்​சுமி (45), பின்​னலாடை நிறு​வனத்​தில் வேலை செய்​து​வந்​தார். இவர்​களது மகள் பூவரசி (25), படிப்பை முடித்​து​விட்டு பல்​லடத்​தில் உள்ள இருசக்கர வாகன விற்​பனை நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், திண்​டுக்​கல் மாவட்​டம் பட்​டிவீரன்​பட்​டியைச் சேர்ந்த அக் ஷய் என்​பவருக்​கும், பூவரசிக்​கும் ‘இன்​ஸ்​டாகி​ராம்’ மூல​மாக பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வரும் கடந்த 4 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால் இவர்​களது காதலுக்கு பூவரசி​யின் பெற்​றோர் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அக் ஷய்​யுடன் பேசுவதை பூவரசி தவிர்த்தார்.

இந்​நிலை​யில், பூவரசி​யைப் பார்ப்​ப​தற்​காக அவரது வீட்​டுக்கு அக் ஷய் நேற்று வந்​துள்​ளார். அங்கு பூவரசி மற்​றும் தனலட்​சுமி​யுடன் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். வாக்​கு​வாதம் முற்​றிய நிலை​யில், ஆத்​திரமடைந்த அக் ஷய் வீட்​டில் இருந்த அரி​வாளை எடுத்து பூவரசி, தனலட்​சுமி ஆகியோரை வெட்​டி​யுள்​ளார். இதில், இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

சத்​தம் கேட்டு வந்த அக்கம்​பக்​கத்​தினர் அக் ஷையை பிடித்து கட்​டி​வைத்துவிட்டு பல்​லடம் காவல் நிலை​யத்​துக்​குத் தகவல் தெரி​வித்​துள்​ளனர். அங்கு வந்த போலீ​ஸார் அவரைக் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். கொலை நிகழ்ந்த இடத்தை எஸ்பி சிருஷ்டி சிங் பார்​வை​யிட்​டார். இச்​சம்​பவம் அங்கு பரபரப்பை ஏற்​படுத்​தி​உள்ளது.

<div class="paragraphs"><p>பூவரசி,&nbsp;அக் ஷய்</p></div>
அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி பேரம்: 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in