ஆதம்பாக்கத்தில் முதியவரை மிரட்டி ரூ.21 லட்சம் மோசடி - கணவன், மனைவி கைது

சூர்ய பிரேம்​குமார் | நளினி

சூர்ய பிரேம்​குமார் | நளினி

Updated on: 
1 min read

சென்னை: சென்னை ஆதம்​பாக்​கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சங்​கரன் (72) என்​பவர், உணவகம் ஒன்​றில் கேசி​யராகப் பணி​யாற்றி வரு​வதுடன், கடந்த 15 ஆண்​டுகளாக வட்​டிக்கு பணம் கொடுக்​கும் தொழிலும் செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், அவர் பணி​யாற்​றும் உணவகத்​தில் பாத்​திரம் கழுவும் வேலை செய்து வந்த நளினி (30) என்​பவர், வாடகை வீட்டுக்​குச் செல்ல முன்​பண​மாக கடந்த ஏப்​ரல் மாதம் ரூ.30 ஆயிரம் கேட்​டுள்​ளார். இதையடுத்து சங்​கரன் அவரிடம் பணம் கொடுத்​துள்​ளார். தொடர்ந்து பல்​வேறு காரணங்​களைக் கூறி, அவரிடம் நளினி ரூ.2.5 லட்​சம் வரை கடனாக பெற்​றுள்​ளார். ஒருமுறை நளினி, ரூ.2.5 லட்​சத்​தைத் திருப்​பிக் கொடுக்க வந்தபோது, போலீ​ஸார் அவரைத் தடுத்து பணம் குறித்து விசாரித்த​தாகக் கூறப்​படு​கிறது.

அப்​போது, சங்​கரனைக் காப்​பாற்​று​வதற்​காக வேறு ஒரு​வரை பணம் கொடுத்​தவ​ராகக் காட்​டிய​தாகவும், அந்த நபர் சிறை​யில் இருப்​ப​தாகவும் நளினி தெரி​வித்​துள்​ளார். மேலும், சிறை​யில் உள்ள நபரைப் பிணை​யில் எடுக்​கப் பணம் தேவைப்படுவதாகவும், பின்​னர் அந்த நபர் இறந்​து​விட்​ட​தாகவும் கூறி, நளினி, அவரது கணவர் சூர்ய பிரேம்​குமார் (39) மற்​றும் நளினி​யின் மாமா மணி ஆகியோர் சங்​கரனிடம் பல்​வேறு காரணங்​களைக் கூறி பணம் கேட்​டுள்​ளனர்.

இதனை நம்பி சங்​கரன், ஜி-பே மற்​றும் ரொக்​க​மாகச் சிறுகச்சிறுக மொத்​தம் ரூ.20.97 லட்​சம் வழங்​கி​யுள்​ளார். தொடர்ந்து செல்போனில் தொடர்​பு​கொண்டு பணம் கொடுக்​கா​விட்​டால் குடும்​பத்​தினரைக் கொலை செய்​து​விடுவ​தாக மிரட்​டிய​தாகவும் கூறப்​படு​கிறது.

இது​குறித்து சங்​கரன் அளித்த புகாரின் பேரில் ஆதம்​பாக்​கம் போலீ​ஸார் மோசடி உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி, மோசடி​யில் ஈடு​பட்ட மதுரை மாவட்டம் தல​வாசல், சம்​மட்​டிபுரத்​தைச் சேர்ந்த சூர்ய பிரேம்குமார் (39), அவரது மனைவி நளினி (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

<div class="paragraphs"><p>சூர்ய பிரேம்​குமார் | நளினி</p></div>
சபரிமலையில் மண்டல கால வழிபாட்டுக்கு நாளை நடை திறப்பு

X