போடி அருகே புதுப்பெண் உட்பட 2 பேர் கொலை: கணவர், மாமனார் கைது

பிரதீப், சிவக்குமார், நிகிலா, விவேக்

பிரதீப், சிவக்குமார், நிகிலா, விவேக்

Updated on
1 min read

போடி: திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் உட்பட 2 பேரை வெட்டிக்கொலை செய்த கணவர், மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.

போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த அமமுக கிளைச் செயலாளர் பிரதீப் (27), இவருக்கும் சின்னமனூர் சொக்கநாதபுரம் திமுக முன்னாள் நகரச் செயலாளரான நாகராஜ் மகள் நிகிலாவுக்கும் (24) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. நிகிலா சட்டப்படிப்பு முடித்திருந்தார்.

இந்நிலையில் பிரதீப் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது இதனால், கணவன் மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோபித்துக் கொண்டு நிகிலா தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்பு பெரியோர் பேச்சுவார்த்தை நடத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பிரதீப், மனைவியை கடுமையாக தாக்கினார். நிகிலாவின் உறவினர்கள் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் நிகிலா, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் விவேக் மற்றும் உறவினர்கள் பிரதீப் வீட்டுக்கு வந்தனர். அங்கு தாங்கள் அளித்த சீர்வரிசை, நகைகளைக் கேட்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரதீப், அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் நிகிலா, விவேக்கை அரிவா ளால் வெட்டிக் கொலை செய்தனர்.

போடி தாலுகா காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார். பிரதீப் மீது ஏற்கெனவே பல் வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>பிரதீப், சிவக்குமார், நிகிலா, விவேக்</p></div>
தங்கைக்கு பாலியல் தொல்லை: கணவனுடன் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற பெண் கைது @ கடலூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in