சென்னை | ஆங்கில மருத்துவம் பார்த்த மும்பை ஹோமியோபதி மருத்துவர் உதவியாளருடன் கைது

பூனம் லலித் சர்​மா, ஷில்பா

பூனம் லலித் சர்​மா, ஷில்பா

Updated on
1 min read

சென்னை: ஹோமியோபதி படித்​து​விட்​டு, ஆங்​கில மருத்துவம் பார்த்த மும்பை பெண், உதவி​யாள​ருடன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை நுங்​கம்​பாக்​கம், கோடம்​பாக்​கம் நெடுஞ்​சாலை​யில் பிரபல​மான தனி​யார் உணவகம் உள்​ளது.

அங்​குள்ள அறை ஒன்​றில் மகா​ராஷ்டிரா மாநிலம் மும்​பையைச் சேர்ந்த பூனம் லலித் சர்மா (52) என்​பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்​து​விட்​டு, காது தொடர்​பான பிரச்​சினை​களுக்கு ஆங்​கில மருந்​துகளைப் பயன்​படுத்​தி​யதோடு, அறுவை சிகிச்​சைகளை செய்​த​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதுகுறித்​து, சென்​னை​யில் உள்ள மருத்துவம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்கக அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில் பூனம் லலித் சர்மா ஆங்​கில மருத்துவம் படிக்​காமல் அது தொடர்​பான சிகிச்சை அளித்து வந்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து அவர்​கள் தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து பூனம் லலித் சர்​மா, அவருக்கு உதவி​யாக​வும் இருந்து வந்த சவு​கார்​பேட்​டையைச் சேர்ந்த ஷில்பா (44) ஆகிய இரு​வரைக் கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து ஆங்​கில சிகிச்சை முறைக்கு பயன்​படுத்​தப்​படும் ஊசிகள், மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. கைது செய்​யப்​பட்ட இரு​வரும் நேற்று முன்​தினம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>பூனம் லலித் சர்​மா, ஷில்பா</p></div>
பரங்கிமலையில் களரிப்பயற்று முதல் குதிரையேற்றம் வரை ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in