சென்னை | முந்திச் செல்வதில் மோதல்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்

சென்னை | முந்திச் செல்வதில் மோதல்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்
Updated on
1 min read

சென்னை: ​முந்​திச் செல்​வ​தில் ஏற்​பட்ட மோதலில், பேருந்து ஓட்​டுநர் மற்​றும் நடத்​துநரை தாக்​கிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை மாநகர அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வருபவர் மாதவன் (26).

இவர், நேற்று மதி​யம் தடம் எண் 28பி அரசு பேருந்தை எழும்​பூரில் இருந்து எண்​ணூர் நோக்கி இயக்​கிச் சென்​றார். பேருந்து சிந்​தா​திரிப்​பேட்டை ஏ-1 பார்​சல் அலு​வல​கம் அருகே சென்​ற​போது, அந்த வழி​யாக வந்த பைக் ஒன்று முந்​திச் செல்ல முயன்​றது.

பேருந்து ஓட்​டுநர் வழி​வி​டா​மல் சென்​றுள்​ளார். சில மீட்​டர் தூரத்​தில் பேருந்தை பைக் முந்​திச் சென்​றது. அப்​போது, பேருந்து ஓட்​டுநர் ஹாரன் அடித்​துக் கொண்டே சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதனால், பைக்​கில் சென்று கொண்​டிருந்​தவர்​கள் ஆத்​திரம் அடைந்​தனர். மேலும், பேருந்தை நிறுத்தி "எதற்​காக ஹாரன் அடித்​தாய்?" என்று கேட்டு

தகராறில் ஈடு​பட்​டனர். பின்​னர் ஓட்​டுநர் மாதவனை சரமாரி​யாக தாக்​கினர். தடுக்க முயன்ற நடத்​துநர் சத்​யா​வை​யும் தாக்​கி, கொலை மிரட்​டல் விடுத்து அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர்.

தாக்​குதல் விவ​காரம் தொடர்​பாக, சிந்​தா​திரிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் மாதவன் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து, சேப்​பாக்​கம் லாசல் தெருவை சேர்ந்த லிங்​கன் (43), சிந்​தா​திரிப்​பேட்​டையைச் சேர்ந்த நந்​தகு​மார் (52) ஆகிய இரு​வரை​யும்​ கைது செய்​து விசாரித்து வருகின்றனர்​.

சென்னை | முந்திச் செல்வதில் மோதல்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in