சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து கோலாலம்​பூர் வழி​யாக நேற்று சென்​னைக்கு பயணிகள் விமானம் வந்​தது.

அப்​போது, சுற்​றுலா விசாவில் தாய்​லாந்து சென்​று​விட்டு திரும்​பிய கேரள இளைஞரின் உடைமை​களை சோதனை செய்த போது, உணவுப் பொருட்​கள் அடங்​கிய பாக்​கெட்​டுகளில் ரூ.5 கோடி மதிப்​புள்ள 4 கிலோ 970 கிராம் உயர்​ரக ஹைட்​ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், அந்த இளைஞரை கைது செய்​தனர்.

ஜிபிஎஸ் பறிமுதல் கர்​நாடக மாநிலம் மங்​களூர் செல்​லும், இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய நேற்று வந்த ஆகாஷ் (33) என்​பவரின் உடைமை​களை அதி​காரி​கள் சோதனை செய்த போது, ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்​பது தெரிய​ வந்​தது. விமானத்​தில் சேட்​டிலைட் போன், ஜிபிஎஸ் கரு​வியை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்​ப​தால், அந்த ஜிபிஎஸ் கரு​வியை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு

X