ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: வனச்சரக அலுவலர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்

அருணகிரி, சுப்பிரமணி, முத்து, செங்குட்டுவன், பிரபு

அருணகிரி, சுப்பிரமணி, முத்து, செங்குட்டுவன், பிரபு

Updated on
2 min read

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை பகு​தி​யில் உள்ள பழங்​குடி​யின மக்​களிடம் தனி​நபர் நில உரிமை பெற்று தரு​வ​தாகக் கூறி பல லட்ச ரூபாய் பெற்ற புகாரில் வனச்சரக அலுவலர்கள் உள்பட 6 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை பகு​தி​யில் உள்ள பழங்​குடி​யின மக்​கள் தனிநபர் நில உரிமை கோரி 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்டோர் பழங்​குடி​யினர் நல துறை​யில் விண்​ணப்​பித்​துள்​ளனர். வனத்​துறைக்குச் சொந்​த​மான பகு​தி​யில் இருந்து பழங்​குடி​யினர்​களுக்கு வன உரிமை​களை அங்​கீகரித்​தல் சட்​டத்​தின்​கீழ் தனி​நபர் நில உரிமை வழங்​கப்​படு​கிறது.

இந்த உரிமை மூலம் வன பகு​தி​யில் வசித்து வரும் ஒரு பழங்​குடி​யின தனி​நபர் அல்​லது அவரது குடும்​பம், தங்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்​காக பயி​ரிட்டு வரும் விவ​சாய நிலம் மற்​றும் அவர்​கள் குடியிருக்​கும் வீட்டுமனை ஆகிய​வற்றுக்கு சட்​டப்​பூர்​வ​மாக உரிமை கோர முடி​யும்.

இந்த தனி​நபர் நில உரிமை பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கும் பழங்​குடி​யினர் 2025 டிச.13 அன்றோ அல்​லது அதற்கு முன்போ அந்த வன நிலத்தை பயன்​படுத்​தி, விவ​சாயமோ அல்​லது குடி​யிருப்​ப​தாகவோ இருக்க வேண்​டும். இந்த நில உரிமை பெறு​பவர்​கள் அவர்​களது பிள்​ளை​கள் பயன்​படுத்​தலாம். ஆனால், இந்த நிலத்தை வேறு யாருக்​கும் விற்​கவோ, தான​மாக வழங்​கவோ அல்​லது அடமானம் வைக்​கவோ முடி​யாது. இத்​தகைய தனி நபர் நில உரிமையை பெறு​வதற்கு 3 அடுக்கு குழுக்​கள் மூலம் சரி​பார்ப்பு நடத்​தப்​பட்டு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாதுமலை பகு​தி​யில் தனிநபர் நில உரிமை கோரி பழங்​குடியினர் நலத் துறை மூல​மாக விண்​ணப்​பித்​திருந்த 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விண்ணப்​பங்​களை, களஆய்வு செய்​யக்​கோரி மாவட்ட வன துறை​யினருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து விண்​ணப்​பங்​களை கொண்டு கள ஆய்வு மேற்​கொள்​ளும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இந்த களஆய்வு பழங்​குடி​யின நலத்​துறையை ஒருங்​கிணைப்​புத் துறை​யாகக் கொண்​டு, ஒவ்​வொரு கிராம சபையிலும் வரு​வாய் மற்​றும் வனத்​துறை அலு​வலர்​கள் இணைந்​து, மக்​கள் பங்​களிப்​புடன் கள ஆய்வு மற்​றும் நில அளவை பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் ஜமு​னாமரத்​தூர், மேல்​பட்​டு, நாடானூர் பகு​தி​களில் உள்ள மலை​வாழ் மக்​களிடம் தனி​நபர் நில உரிமை பெற்று தரு​வ​தாகக் கூறி பணம் கேட்டு வன துறை​யினர் சிலர் மிரட்​டிய​தாக சென்​னை​யில் உள்ள வனத்​துறை லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார் வந்​துள்​ளது.

இதையடுத்து வனத்​துறை​யில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரி​வினர் சம்​பந்​தப்​பட்ட பகு​தி​களுக்குச் சென்று பழங்​குடி​யின மக்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், கடந்த சில மாதங்​களுக்கு முன்பு பலரிடம் நில உரிமை பெற்று தரு​வ​தாகக் கூறி 6 வனத்​துறை ஊழியர்​கள் பல லட்​சம் பணம் பெற்​றது தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்​து, பணம் பெற்ற புகாரில் சிக்​கிய திருவண்​ணா​மலை மாவட்​டத்தில் தற்போது வனவ​ராக பணி​யாற்றி வரும் சுப்​பிரமணி, அருணகிரி, வனக்​காப்​பாளர் முத்​து, வனச்சரக அலு​வலர் செங்​குட்​டு​வன் ஆகிய 4 பேர் மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் பணிபுரிந்து தற்​போது அயல்பணி​யாக சென்​னை​யில் பணிபுரிந்து வரும் வனச்​சரக அலு​வலர்​கள் பிரபு, சுரேஷ் உள்பட 6 பேரை திரு​வண்​ணா​மலை மாவட்ட வன அலு​வலர் சுதாகர் சஸ்பெண்ட் செய்து உத்​தர​விட்​டார்.

மேலும், இதுகுறித்து விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வரும் நிலை​யில் முழு​மை​யான விசா​ரணைக்கு பின்​னரே பொது​மக்​களிடம் பெறப்​பட்ட பணம் எவ்​வளவு என்​பது தெரிய​வரும் என வனத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>அருணகிரி,&nbsp;சுப்பிரமணி,&nbsp;முத்து,&nbsp;செங்குட்டுவன்,&nbsp;பிரபு</p></div>
“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in