ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்​தி​உள்​ளது. ரங்​க​நாதர் கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் வசதிக்​காக பஞ்​சக்​கரை​யில் யாத்ரி நிவாஸ் என்ற பயணி​கள் தங்​கும் விடுதி உள்​ளது.

இங்கு தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு தில்​லைஸ்​தானம் பகு​தி​யைச் சேர்ந்த எலெக்ட்​ரீஷியன் மற்​றும் பூமாலை கட்​டும் தொழிலாளி சுவாமி​நாதன்​(67), அவரது மனைவி செண்​பகவள்​ளி(65), மகள்​கள் பவானி(42), ஜீவா(37) ஆகியோர் கடந்த 10-ம் தேதி ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்​கி​யுள்​ளனர்.

இவர்​களில் செண்​பகவள்​ளி, பவானி, ஜீவா ஆகியோர் மனவளர்ச்சி குன்​றிய​வர்​கள். பவானிக்கு திரு​மண​மாகி சில ஆண்​டு​களில் விவாகரத்​தாகி​விட்​டது. ஜீவாவுக்கு சில ஆண்​டு​களாக பார்வை குறை​பாடு இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், அவர்​கள் தங்​கி​யிருந்த அறை 4 நாட்​களாக திறக்​கப்​பட​வில்​லை. மேலும், அறை​யில் இருந்து துர்​நாற்​றம் வீசி​யுள்​ளது.

இதனால், சந்​தேகமடைந்த யாத்ரி நிவாஸ் ஊழியர்​கள், ஸ்ரீரங்​கம் போலீ​ஸாருக்கு தகவல் அளித்​தனர். போலீ​ஸார் அறை​யின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​த​போது, நால்​வரின் உடல்​களும் அழுகிய நிலை​யில் கிடந்​துள்​ளன. அவற்றை மீட்ட போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்ரீரங்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அந்த அறை​யில் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் சுவாமி​நாதன் எழு​திய கடிதம் கிடைத்​தது. அதில், “மூத்த மகளுக்கு திரு​மண​மாகி, விவாகரத்து ஆகி​விட்​டது. இளைய மகளுக்கு கண்​பார்வை தெரிய​வில்​லை. எங்​களுக்கு வயதாகி​விட்​ட​தால், எங்​களுக்​கு பின்​னால் பிள்​ளை​களை பார்த்​துக் கொள்ள யாரும் இல்லை.

எனவே, விரக்​தியில் தற்​கொலை முடிவை எடுத்​துள்​ளோம்” என்று தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “4 பேரும் கடந்த 14-ம் தேதி இரவு தற்​கொலை செய்து கொண்​டிருக்​கலாம். அனை​வரும் அளவுக்கு அதி​க​மாக தூக்க மாத்​திரைகளை சாப்​பிட்டு உயி​ரிழந்​துள்​ளனர்​” என்​று தெரிவித்​தனர்.

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
சிவாச்சாரியார் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in