

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போதைப்பொருள் வைத்திருந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் புத்தேந்தல் ரயில்வே கேட் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம் 22 கிராம் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, பரமக்குடியைச் சேர்ந்த மதன்ராஜ், மாயாகுளத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, ராமநாதபுரம் வெற்றிவேலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தொடர்புடைய கீழக்கரையைச் சேர்ந்த சீனி சாகுல் ஹமீது என்பவரும் கைது செய்யப்பட்டார்.