

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற பெரியகடைவீதி கோனியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் 15-ம் தேதி எண்ணப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் சிலர் யாரும் கவனிக்காத சமயத்தில் ஒரு உண்டியலை தனியாக எடுத்து வைத்தனர். பின்னர், அன்றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்கைகளை ஒரு பையில் எடுத்துச் சென்றனர்.
இதை கவனித்த பக்தர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், மண்டல இணை ஆணையர் ரமேஷ் நேற்று முன்தினம்விசாரணையில் ஈடுபட்டார். இதில், காணிக்கை பணத்தை திருடியது கோட்டைமேட்டைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணராஜ், ஊழியர்கள் பீளமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், பேரூரைச் சேர்ந்த சரவணன், ரத்தினபுரியைச் சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. புகாரின்பேரில், உக்கடம் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.