சென்னை: தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.11 லட்சம் வழிப்பறி செய்த 4 பேர் கைது

கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணமா என விசாரணை
கைதான பப்லு, செல்வன், அருண்குமார், முகமது பைசல்.

கைதான பப்லு, செல்வன், அருண்குமார், முகமது பைசல்.

Updated on
1 min read

சென்னை: தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.11 லட்சம் வழிப்பறி செய்த விவகாரத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பாரிமுனையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உறவினரிடம் இருந்து ரூ.12 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, தனது பைக்கில் தி.நகர் வாணி மகால் மேம்பாலம் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்.

மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கார்த்திகேயனின் வாகனத்தை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரை கத்தி முனையில் மிரட்டி, அவர் வைத்திருந்த பையைப் பறித்து தாக்கியது. அந்த பையில் இருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு தப்பியோடினர்.

அந்த பணத்தில், ரூ.1 லட்சத்தை கார்த்திகேயன் தனது பேன்ட் பாக்கெட்டில் தனியாக வைத்திருந்ததால் தப்பியது. இதுகுறித்து, பாண்டிபஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் வழிப்பறியில் தொடர்புடைய பப்லு, ஆனந்த் செல்வன், அருண்குமார், முகமது பைசல் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், “நண்பர்கள் அழைத்ததால்தான் வந்தோம், மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

எனவே, தப்பியோடிய மற்ற இருவரையும் கைது செய்தால்தான் வழிப்பறி சம்பவத்தின் முழு பின்னணி தெரியும் என போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும், கார்த்திகேயன் பெரிய தொகையான ரூ.12 லட்சத்தை எதற்காக யாரிடமிருந்து பெற்றார் என்பது குறித்தும், பறிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>கைதான பப்லு, செல்வன், அருண்குமார், முகமது பைசல்.</p></div>
11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in