கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

சம்பவம் நடந்த இடம்.

சம்பவம் நடந்த இடம்.

Updated on
1 min read

கோவை: கோவை​யில் கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் முதல்​கட்ட குற்​றப்​பத்​திரிகை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. கைதான மூவருக்​கும் கோவில்​பாளை​யத்​தில் நடந்த கொலை வழக்​கில் தொடர்பு இருப்​பதும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

கோவை​யில் 21 வயதான கல்​லூரி மாண​வி​யும், அவரது ஆண் நண்​பரும் கடந்த மாதம் 2-ம் தேதி இரவு பீளமேடு விமான நிலை​யம் பின்​புறம் காரில் பேசிக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த 3 பேர் கும்​பல் ஆண் நண்​பரை தாக்​கி​விட்​டு, மாண​வியை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​தது. இந்த சம்​பவம் மாநிலம் முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பாக பீளமேடு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்​பு​சாமி(30), அவரது சகோ​தரர் கார்த்​திக் என்ற காளீஸ்​வரன் (21), மதுரை மாவட்​டம் கருப்​பாயூரணி​யைச் சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகியோரை வெள்​ளக்​கிணறு பகு​தி​யில் கடந்த 3-ம் தேதி நள்​ளிரவு சுட்​டுப்​பிடித்து கைது செய்​தனர்.

சிகிச்​சைக்​குப் பின்​னர் 3 பேரும் கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். அவர்​களை பாதிக்​கப்​பட்ட மாண​வி​யும், அவரது ஆண் நண்​பரும் அடை​யாளம் காட்டினர்.

கைதான 3 பேருக்​கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்​தப்​பட்​டது. இந்த வழக்​கில் 30 நாட்​களுக்​குள் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார். அதன்​படி, குற்​றப்​பத்​திரிகை தயாரிக்​கும் பணியை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யிருந்​தனர்.

வழக்கு தொடர்​பாக பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் அளித்த விவரங்​கள், விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் உள்​ளிட்​ட​வற்றை இணைத்து போலீ​ஸார் குற்​றப்​பத்​திரி​கையை தயாரித்​தனர்.

50 பக்​கங்​கள் கொண்ட இந்த முதல்​கட்ட குற்​றப்​பத்​திரிகை கோவை மாவட்ட கூடு​தல் மகளிர் நீதி​மன்​றத்​தில், நீதிபதி சிந்து முன்​னிலை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மற்ற விவரங்​களு​டன் அடுத்​தகட்ட குற்​றப்​பத்​திரி​கை​யும் விரை​வில் தாக்​கல் செய்​யப்​படும் என்று தெரி​கிறது.

கொலை வழக்​கில்​... கோவை அரு​கே​யுள்ள குரும்​ப​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் தேவ​ராஜ்(55). ஆடு மேய்ப்​பவர். கடந்த மாதம் 2-ம் தேதி செர​யாம்​பாளை​யம் காட்​டில் ஆடு மேய்க்​கச் சென்​றார். ஆள் நடமாட்​டம் இல்​லாத பகு​தி​யில் கருப்​பு​சாமி, காளீஸ்​வரன், தவசி ஆகியோர் மது அருந்​திக் கொண்​டிருந்​தனர்.

பொது இடத்​தில் மது அருந்த வேண்​டாம் என்று தேவ​ராஜ் கண்​டித்​த​தால் ஆத்​திரமடைந்த மூவரும் கட்​டை​யால் தேவ​ராஜை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர்.

இதில் தேவ​ராஜ் உயி​ரிழந்​தார். போலீ​ஸார் விசா​ரணை​யில் தேவ​ராஜ் கொலை வழக்​கில் கருப்​பு​சாமி, காளீஸ்​வரன், தவசி ஆகியோ​ருக்கு தொடர்பு இருப்​பது உறுதி செய்​யப்​பட்​ட​தால், மூவரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்க கோவில்​பாளை​யம் போலீ​ஸார் திட்​ட​மி்ட்​டுள்​ளனர்.

அதே​போல, அன்று கோவில்​பாளை​யத்​தில் நடந்த இருசக்கர வாக​னத் திருட்டு வழக்​கிலும் இந்​த 3 பேருக்​கும்​ தொடர்​பு இருப்​ப​தை​யும்​ போலீ​ஸார்​ கண்​டறிந்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>சம்பவம் நடந்த இடம்.</p></div>
41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ கண்காணிப்புக் குழு முன் கரூர் ஆட்சியர், ஐ.ஜி., எஸ்.பி. ஆஜர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in