ராணுவ ரகசியங்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்ததாக வேலூரில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கைது

பாபு

பாபு

Updated on: 
1 min read

வேலூர்: இந்​திய ராணுவ ஆயுத தளவாடங்​களின் திறன் மற்​றும் அதன் இருப்​பிட விவரங்​களை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்​த​தாக ஓய்வு​பெற்ற ராணுவ கேப்​டனை வேலூர் கிராமிய போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

வேலூர் மாவட்​டம் கணி​யம்​பாடி அருகேயுள்ள வல்​லம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பாபு (52). ராணுவத்​தில் 28 ஆண்​டுகளாக பணி​யாற்றி கேப்​டனாக பதவி உயர்வு பெற்று கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு​பெற்​றுள்​ளார். தற்​போது, சென்​னை​யில் உள்ள கல்​லூரி​களில் என்​சிசி மாணவர்​களுக்​குப் பயிற்சி அளித்து வரு​கிறார். இவர், கடந்த சில மாதங்​களாக ராணுவ ரகசி​யங்​களை சேகரித்து யாரோ ஒரு​வருக்​குப் பகிர்ந்து வரு​வ​தாக மத்​திய உளவுத்​துறை​யினர் கண்​டறிந்​ததுடன் பாபுவிடம் விசா​ரணை​யும் நடத்​தி​யுள்​ளனர்.

இந்த தகவலை அடுத்து வேலூர் கிராமிய காவல் ஆய்​வாளர் புனிதா, ஓய்வு​பெற்ற ராணுவ அதி​காரி பாபுவிடம் விசா​ரணை நடத்​தி​யதில் ஹைத​ரா​பாத்​தில் இருப்​ப​தாகக் கூறப்​படும் பெண் ஒரு​வருக்கு வாட்ஸ்-அப் மூலம் இந்​திய ராணுவ ஆயுத தளவாடங்​களின் தகவல்​களைப் பகிர்ந்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

பின்​னர், பாபுவை போலீ​ஸார் நேற்று கைது செய்து வேலூர் மத்​தி​யச் சிறை​யில் அடைத்​தனர்.

இது​தொடர்​பாக, போலீஸ் அதி​காரி​கள் கூறும்​போது, “ராணுவத்​தில் பல்​வேறு பிரிவு​களில் நீண்ட காலம் பணி​யாற்​றியுள்ள பாபு, டிஆர்​டிஓ-வில் ஆயுதங்​கள் சோதனை பிரி​வில் சில காலம் பணி​யாற்​றியுள்​ளார். சமூக வலைத்​தளம் மூலம் பாபுவுக்கு இளம் பெண் ஒரு​வர் கடந்த ஒன்​றரை ஆண்​டுக்கு முன்பு அறி​முக​மாகி​யுள்​ளார்.

தான் ஹைத​ரா​பாத்​தில் வசித்து வரு​வதுடன் டிஆர்​டிஓ ஆராய்ச்சி பிரி​வில் இளநிலை அதி​காரியாக பணி​யாற்றி வரு​வ​தாகவும் அந்த இளம் பெண் கூறியுள்​ளார். அடிக்​கடி பாபுவிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமும் பேசி​யுள்​ளார். மேலும், அந்த பெண் தனது அந்​தரங்க படங்​களை பாபுவுக்கு பகிர்ந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

சில மாதங்​களுக்கு முன்பு டிஆர்​டிஓ ஆராய்ச்சி பணிக்​காக இந்​திய ராணுவத்​தில் பயன்​படுத்​தப்​படும் ஆயுத தளவாடங்​களின் விவரங்​களை​யும் அதன் துல்​லிய தாக்​குதல் திறன் குறித்​தும் அந்த பெண் கேட்​டுள்​ளார். அதன் விவரங்​களை பாபு பகிர்ந்​ததுடன் முக்​கிய தளவாடங்​களின் தற்​போதைய இருப்​பிடங்​கள் குறித்து தனக்​குத் தெரிந்த சில ராணுவ வீரர்​களிடம் கேட்​டறிந்து அந்த பெண்​ணுக்​குப் பகிர்ந்​துள்​ளார்.

மேலும், இளம் பெண் கேட்​டுக் கொண்​டதற்​காக பாபு தனது பெயரில் 5 சிம் கார்​டுகளை வாங்​கி​யுள்​ளார். அந்த எண்​களுக்​கான வாட்ஸ்-அப் ஓடி​பியை இளம் பெண்​ணுக்கு பாபு பகிர்ந்​துள்​ளார். மத்​திய உளவுத்​துறை அதி​காரி​கள் விசா​ரணைக்​குப் பிறகு பாபு, தனது வாட்ஸ்-அப்​பில் இருந்த அனைத்து உரையாடல் விவரங்​களை​யும் அழித்​துள்​ளார். அவற்றை மீட்க நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>பாபு</p><p></p></div>
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in