

திருப்பூர்: திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததார் முருகன். மாநகராட்சி பகுதிகளில் செய்த பணிகளுக்கு பில் தொகை விடுவிக்ககோரி 3-வது மண்டல பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனிடம் விண்ணப்பித்தார்.
அதற்கு அவர் ரூ.8.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், முதல் கட்டமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதுபற்றி முருகன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்கள் தந்த ஆலோசனைப்படி சுப்பிரமணியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.