முதல்வர் குறித்து யூடியூப்பில் அவதூறு கருத்து: அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது

கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பசுபதி செந்தில்

கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பசுபதி செந்தில்

Updated on
1 min read

கரூர்: முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் பசுபதி செந்தில் (50). இவர் அதிமுக ஈரோடு மண்டல சமூக வலைதள பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி குறித்து யூடியூப்பில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீஸார் பிப்.11ம் தேதி பசுபதி செந்தில் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பசுபதி செந்திலை பிப்.27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதை அடுத்து அவரை கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பசுபதி செந்தில் பேசியதை ஓளிப்பரப்பு செய்த யூடியூப் ஐபி முகவரிக்கு சொந்தமானவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பசுபதி செந்தில்</p></div>
திமுக உறுதியளித்த அரசு வேலைவாய்ப்புகளில் 17% மட்டுமே நிறைவேறியுள்ளது: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in