சென்னை | திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் கிணற்றில் குதித்து தந்தை இறந்ததால் துக்கத்தில் மகள் தற்கொலை

கிருஷ்ணகுமார்,  பாக்கியா

கிருஷ்ணகுமார், பாக்கியா

Updated on
1 min read

சென்னை: திருமணம் செய்து வைக்க முடி​யாத விரக்​தி​யில் கிணற்​றில் குதித்து தந்தை தற்​கொலை செய்து கொண்​டார். தந்தை இறந்த துக்​கத்​தில் மகளும் தூக்​கிட்டு உயிரை மாய்த்​துக் கொண்​டார்.

சென்னை வடபழனி கங்​கை​யம்​மன் கோயில், 1-வது தெரு​வில் வசித்​தவர் கிருஷ்ணகு​மார் (57). ஆட்டோ ஓட்​டுந​ரான இவருக்கு 2 மகள்​கள். மூத்த மகள் பிருந்தா திரு​மண​மாகி கணவருடன் அம்​பத்​தூரில் வசிக்​கிறார். 2-வது மகள் பாக்​கியா (30).

திரு​மணம் ஆகாமல் தாய், தந்​தை​யுடன் வசித்து வந்​தார். இந்​நிலை​யில் இளைய மகள் பாக்​கி​யா​வுக்கு 30 வயதாகி​யும் திரு​மணம் ஆகாத​தால் தந்தை கிருஷ்ணகு​மார் மன உளைச்​சலில் இருந்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் கடந்த 7-ம் தேதி வீட்​டிலிருந்து வெளியே சென்ற கிருஷ்ணகு​மார் நீண்ட நேர​மாகி​யும் வீடு திரும்​ப​வில்​லை. இதையடுத்து மனை​வி​யும், மகளும் அவரை தேடினர். எங்கு தேடி​யும் அவரை கண்​டு​பிடிக்க முடி​யாமல் இரு​வரும் வீடு திரும்​பினர்.

மறு​நாள் கிருஷ்ணகு​மாரின் மனை​வி, வீட்​டுக்கு பின்​புறம் பாழடைந்த கிணற்​றின் மீது கிருஷ்ணகு​மாரின் செல்​போன் இருப்​ப​தைக் கண்டு தன் மகளிடம் தெரி​வித்​துள்​ளார்.

உடனே மகள் பாக்​கியா ஓடிவந்து பார்த்​த​போது கிணற்​றில் தந்தை உடல் மிதப்​ப​தைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​து, அம்​மாவை வீட்​டுக்​குள் அழைத்​துச் சென்று அவரை அறை​யில் வைத்து பூட்​டி​விட்டு சமையலறைக்​குச் சென்று தூக்​கில் தொங்​கி​னார்.

இதை சற்​றும் எதிர்​பா​ராத பாக்​கி​யா​வின் தாய், உடனே தனது மூத்த மகள் பிருந்​தாவுக்கு போன் செய்து நடந்​தவற்​றைத் தெரி​வித்​தார். இதையடுத்​து, அவர் தனது கணவருடன் தாய் வீட்​டுக்கு விரைந்​தார்.

அறை​யில் பூட்டி வைக்​கப்​பட்ட தாயை மீட்​டதோடு, தூக்​கில் தொங்​கிக் கொண்​டிருந்த பாக்​கி​யா​வை​யும் மீட்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர். பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் பாக்​கியா ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக கூறினர்.

கிணற்​றில் மிதந்த கிருஷ்ண கு​மார் உடலை தீயணைப்பு வீரர்​களின் உதவி​யுடன் வடபழனி போலீ​ஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில் மகளுக்கு 30 வயது ஆகி​யும் இது​வரை திரு​மணம் செய்​து​வைக்க முடி​யாத​தால் தந்தை கிணற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டதும், தந்தை இறந்த துக்​கம் தாங்க முடி​யாமல் மகளும் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டதும்​ தெரிய​வந்​த​தாக போலீஸார் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணகுமார்,  பாக்கியா</p></div>
விளையாட்டு விடுதி மாணவர்கள் 2,600 பேருக்கு உபகரணங்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in