இணையவழி மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வழங்கி கமிஷன் பெற்று வந்த தம்பதி கைது

இணையவழி மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வழங்கி கமிஷன் பெற்று வந்த தம்பதி கைது
Updated on
1 min read

பாடி பகுதியை சேர்ந்தவர் வைரவன் (72) கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் இவரைத் தொடர்பு கொண்டு, மும்பை சைபர் க்ரைம் போலீஸ் பேசுவதாகவும், அவரிடம் வங்கி கணக்குகளில் பண மோசடி நடைபெற்றுள்ளதாவு ம் தெரிவித்தனர்.

மேலும் அவருடைய பணத்தை சோதிக்க வேண்டும் எனவும் ஒரு சில நாட்களில் அவருடைய பணத்தை மீண்டும் அவரின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தி விடுவோம் என்றும், அவ்வாறு அவர் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி கணக்குகளுக்கு செலுத்தவில்லை என்றால் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவோம் என மிரட்டியதால் வைரவன் பயந்து அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் ரூ.60 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

பின்னர் பணம் திரும்பவராததால்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணைய ரகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இணையவழி குற்றப்பிரிவு கா காவல் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர்.

இதையடுத்து, கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி சுசீலா இருவரையும் கைது செய்து செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இவர்கள் கல்லூரி மாணவர்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும் அவர்களுடைய பண தேவைகளை பயன்படுத்தி கமிஷன் தொகை தருவதாகக் கூறி அவர்களுடைய வங்கி கணக்குகளை பெற்று மோசடி நபர்களிடம் கமிஷன் தொகைக்காக வழங்கியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 6 பாஸ் புக், 5 செக் புக், 7 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து இருவரையும், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இணையவழி மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வழங்கி கமிஷன் பெற்று வந்த தம்பதி கைது
சென்னையில் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் 2-வது நாளாக அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in