இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: காங்கிரஸ் பெண் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாப உயிரிழப்பு

உஷா பேபி, அருள்செல்வ பிரபு

உஷா பேபி, அருள்செல்வ பிரபு

Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வ பிரபு (42). இவர், சுரண்டையில் மெட்டல் பாலிஷ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா பேபி (40). இவர் சுரண்டை நகராட்சி 7-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராகப் பதவி வகித்தார். இவரது தங்கை பிளஸ்ஸி (35).

அருள்செல்வ பிரபுவுக்கு சொந்தமான தோட்டம் இரட்டைகுளம் பகுதியில் உள்ளது. நேற்று காலையில் அருள்செல்வ பிரபு, இருசக்கர வாகனத்தில் தனது மனைவி உஷா பேபி மற்றும் பிளஸ்ஸி ஆகியோரை அழைத்துக்கொண்டு, தங்கள் விவசாய நிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். பின்னர், இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சுரண்டை- சங்கரன்கோவில் சாலையில் இரட்டைகுளம் விலக்கு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மோதியது. லாரியில் சிக்கிய 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சுரண்டை போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

<div class="paragraphs"><p>உஷா பேபி, அருள்செல்வ பிரபு</p></div>
‘துரோகத்​தின் சம்​பளம் மரணம்’ - கோவையில் மனைவியை கொன்று ‘வாட்ஸ்அப் ஸ்டேடஸ்’ வைத்த கணவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in