போலி போக்சோ வழக்கு பதிவு செய்ததாக புகார்: திருமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர், காவலர் பணியிடை நீக்கம்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் விசா​ரிக்​கப்​பட்ட வழக்கு ஒன்​றில், ஒரு ​வரிடம் ரூ.5.50 லட்​சம் பணம் பெற்​றுக்​கொண்டு மற்​றொரு​வர் மீது போலி​யாக போக்சோ வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​தது.

இதுகுறித்து உயர் அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர். இந்த விசா​ரணை​யில், சம்​பந்​தப்​பட்ட நபர் மீது போலி​யாக போக்சோ வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டதும், இதற்​காக ரூ.5.50 லட்​சம் லஞ்​ச​மாகப் பெறப்பட்​டதும் தெரிய​ வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, சட்ட விதி​களை மீறி அதி​காரத்​தைத் தவறாகப் பயன்​படுத்​திய திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்​வாளர் விஜயலட்​சுமி மற்​றும் அவருக்கு உடந்​தை​யாக இருந்த காவலர் வசந்த் ராஜா ஆகிய இரு​வரை​யும் பணி​யிடை நீக்​கம் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.

இதன்​பேரில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போலி போக்சோ வழக்கு பதிவு செய்ததாக புகார்: திருமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர், காவலர் பணியிடை நீக்கம்
உயர் நீதிமன்ற கதவுகள் சம்பிரதாயத்துக்கு 1 நாள் மூடல்

X