கோவை: மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மாணவி கைது

கோவை: மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மாணவி கைது
Updated on
1 min read

கோவை: கோவை போத்தனூர் நல்லசிவன் வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(71). இவர், கடந்த 30-ம் தேதி வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது உறவினருடன் நின்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் ஒரு இளம் பெண்ணும், இளைஞரும் வந்தனர்.

அவர்கள் முகவரி கேட்பது போல நடித்து, சரஸ்வதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். காவல் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், நகை பறிப்பில் ஈடுபட்டது பிச்சனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துவரும் திருப்பூரைச் சேர்ந்த பரணிதரன்(21) மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி சிந்து எனத் தெரியவந்தது.

இருவரும் பிச்சனூர் அருகே தங்கியிருந்து, கல்லூரிக்குச் சென்று வந்ததும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போத்தனூர் போலீஸார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

கோவை: மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மாணவி கைது
சோமங்கலம் ஏடிஎம் கொள்ளை வழக்கு: துப்பாக்கியை காட்டி தப்பிய கும்பலில் ஒருவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in